» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு : மார்ச் 21-க்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைப்பு

சனி 1, மார்ச் 2025 4:59:00 PM (IST)

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்குகள் மீதான விசாரணையை வருகிற 21-ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.

அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு எதிரான போக்குவரத்து துறையில் வேலை வாங்கித்தருவதான லஞ்ச வழக்கில், பாதிக்கப்பட்டவர்களான பாலாஜி சார்பில் வக்கீல் பாலாஜி சீனிவாசன், ஊழலுக்கு எதிரான இயக்கத்தின் சார்பில் வக்கீல் பிரணவ சச்தேவ் ஆகியோரும் தாக்கல் செய்த மனுக்களை உச்சநீதிமன்ற நீதிபதி அபய் எஸ்.ஓகா தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது.

இந்த வழக்கு விசாரணையின்போது, செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்குகளின் விசாரணை குறித்த நிலைஅறிக்கையை சீலிட்ட உறையில் தாக்கல் செய்ய சென்னையில் உள்ள எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டுக்கு உச்சநீதிமன்ற கடந்த மாதம் (ஜனவரி) 27-ம்தேதி உத்தரவிட்டது.

இந்த உத்தரவை ஏற்று, செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்குகளின் விசாரணை குறித்த நிலை அறிக்கையை சீலிட்ட உறையில் சிறப்பு நீதிமன்றம் சார்பில், உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இதற்கிடையே இந்த விவகாரம் தொடர்புடைய வழக்கை உச்சநீதிமன்றம்  நேற்று (வெள்ளிக்கிழமை) மீண்டும் விசாரணை நடத்தியது.

அப்போது, சீலிட்ட உறையில் அளித்த அறிக்கையை நீதிபதிகள் பிரித்து படித்து பார்த்தனர். சீலிட்ட உறையில் அளிக்கப்பட்டுள்ள நிலை அறிக்கையின் நகல்களை மனுதாரர், தமிழ்நாடு அரசு ஆகிய தரப்புக்கு வழங்க பதிவாளருக்கு உத்தரவிட்டதுடன், விசாரணையை வருகிற 21-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory