» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

தென்மாநிலங்கள் தண்டிக்கப்பட்டால் போராட்டம் வெடிக்கும்: ரேவந்த் ரெட்டி எச்சரிக்கை!!

சனி 1, மார்ச் 2025 5:15:30 PM (IST)

தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் தென்மாநிலங்கள் தண்டிக்கப்பட்டால் போராட்டம் வெடிக்கும் என்று ஒன்றிய அரசுக்கு தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி எச்சரிக்கை விடுத்துள்ளார். 

ஹைதராபாத்தில் செய்தியாளர்களை சந்தித்த ரேவந்த் ரெட்டி கூறியதாவது; தொகுதி மறுசீரமைப்பு மூலம் பிஹார், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் உத்தரபிரதேசத்தில் தொகுதிகளை அதிகரித்து, நிரந்தர அதிகாரத்தை பெற பாஜக முயற்சி செய்கிறது. தென் மாநிலங்களின் தொகுதி குறையாது என்றே அமித்ஷா கூறுவதாகவும், எத்தனை தொகுதிகள் அதிகரிக்கப்படும் என்று அவர் கூறவில்லை.

தற்போதுள்ள விகிதாச்சாரப்படி தொகுதிகள் அதிகரிக்கப்பட வேண்டும். வெற்றிகரமாக மக்கள் தொகையை கட்டுப்படுத்தியதற்காக தென் மாநிலங்கள் தண்டிக்கப்பட்டால் போராட்டம் வெடிக்கும். தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் தென் மாநிலங்களை பலவீனப்படுத்த பாஜக சதி செய்கிறது. 

தெற்கில் தாங்கள் காலூன்றாததால், தென் மாநிலங்களை அரசியல் மற்றும் நிதி ரீதியாக பலவீனப்படுத்த பாஜக சதி செய்வதாகவும், அதனை தடுக்க வேண்டுமெனவும் ரேவந்த் ரெட்டி குற்றஞ்சாட்டினார். தொகுதி மறுசீரமைப்புக்கு தமிழ்நாடு, கர்நாடகாவை தொடர்ந்து தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory