» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
கொச்சி விமான நிலையத்தில் ரூ.4.5 கோடி கஞ்சா பறிமுதல்: மாடல் அழகி உள்பட 2 பெண்கள் கைது!
வியாழன் 20, மார்ச் 2025 7:44:02 PM (IST)
கொச்சி விமானத்தில் பாங்காக்கில் இருந்து அழகு சாதனங்களுக்கு இடையே மறைத்து வைத்து கடத்திய ரூ.4.5 கோடி மதிப்புள்ள கஞ்சா கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக மாடல் அழகி மற்றும் மேக்கப் கலைஞர் ஆகிய 2 இளம்பெண்கள் கைது செய்யப்பட்டனர்.

அப்போது சந்தேகத்தின் பேரில் 2 இளம்பெண்களிடம் சோதனை நடத்தப்பட்டது. அவர்களில் ஒருவர் மாடல் அழகி. இன்னொருவர் மேக்கப் கலைஞர். பாங்காக்கில் இருந்து மேக்கப் பொருட்களை வாங்கி வருவதாக 2 பேரும் கூறினர். ஆனாலும் அவர்களது நடவடிக்கைகளில் சந்தேகம் ஏற்பட்டதால் போலீசார் 2 பேரின் பேக்குகளில் தீவிர பரிசோதனை நடத்தினர். இதில் மேக்கப் பொருட்களுக்கு இடையே 15 கிலோ கலப்பின கஞ்சா மறைத்து வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சர்வதேச சந்தையில் அதன் மதிப்பு ரூ. 4.5 கோடியாகும். இதையடுத்து விமானநிலைய பாதுகாப்பு அதிகாரிகள் 2 பேரயும் அதிரடியாக கைது செய்து விசாரித்தனர். இதில் ஒருவர் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்த மாடல் அழகியான மான்வி சவுத்ரி என்பது தெரியவந்தது.
இன்னொருவர் டெல்லியை சேர்ந்த மேக்கப் கலைஞரான சிப்பெத் ஸ்வாந்தி என்றும் தெரியவந்தது. தொடர் விசாரணைக்குப் பிறகு 2 பேரும் கொச்சி நெடும்பாசேரி போலீசில் ஒப்படைக்கப்பட்டனர். அவர்கள் யாருக்காக கஞ்சாவை கடத்தி வந்தனர் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 2 வாரங்களுக்கு முன்பும் இதே போல பாங்காக்கில் இருந்து 40 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கலப்பின கஞ்சா கடத்திய மும்பையைச் சேர்ந்த சபா ராஷித் மற்றும் ஷசியா அமர் என்ற 2 இளம்பெண்கள் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பைக் டாக்ஸி சேவைக்கு தடை விதிக்க வேண்டும்: கர்நாடக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!
வியாழன் 3, ஏப்ரல் 2025 11:37:00 AM (IST)

சபரிமலை ஐயப்பன் கோவிலில் பங்குனி உத்திர ஆராட்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
வியாழன் 3, ஏப்ரல் 2025 8:22:22 AM (IST)

வக்ஃப் சொத்துக்கள் ஏழை முஸ்லிம்களுக்குப் பயன்படுத்தப்பட வேண்டும் : கிரண் ரிஜிஜு
புதன் 2, ஏப்ரல் 2025 3:28:20 PM (IST)

மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவதில் மத்திய அரசுக்கு விருப்பமில்லை: காங்கிரஸ்
புதன் 2, ஏப்ரல் 2025 12:09:49 PM (IST)

இடிக்கப்பட்ட வீடுகளுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு: உ.பி. அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!
செவ்வாய் 1, ஏப்ரல் 2025 5:40:05 PM (IST)

இலங்கையிடம் படகுகளை இழந்த மீனவர்களுக்கு என்ன நிவாரணம்?.. கனிமொழி எம்.பி. கேள்வி
செவ்வாய் 1, ஏப்ரல் 2025 5:14:12 PM (IST)
