» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

சூதாட்ட செயலி விளம்பரம்: பிரகாஷ் ராஜ், ராணா, விஜய் தேவரகொண்டா உள்பட 25 பேர் மீது வழக்கு

வெள்ளி 21, மார்ச் 2025 11:37:12 AM (IST)



சூதாட்ட செயலி விளம்பரத்தில் நடித்த ராணா டகுபதி, பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டா உள்பட 25 பிரபலங்கள் மீது  கிரிமினல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தெலங்கானாவின் மியாபூர் நகரைச் சேர்ந்த தொழிலதிபர் பி எம் பனீந்த்ரா சர்மா சூதாட்ட செயலிகளை விளம்பரப்படுத்திய பிரபலங்கள் மீது புகாரளித்துள்ளார். அந்தப் புகாரில் சமூக வலைதள பிரபலங்கள், நடிகர்கள் ஆகியோர் சட்டவிரோத சூதாட்ட செயலிகளை விளம்பரப்படுத்துவதாகவும் அதற்கு ஈடாக பெரும் தொகையை இவர்கள் கமிஷனாக பெறுவதாகவும் அவர் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

இதுதொடர்பாக நடிகர்கள் ராணா டகுபதி, பிரகாஷ் ராஜ், விஜய்தேவரகொண்டா, ப்ரணிதா, லட்சுமி மஞ்சு, நித்தி அகர்வால் மற்றும் சமூக வலைதளப் பிரபலங்கள் 19 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும், இந்த செயலிகள் குறைந்த நேரத்தில் அதிக பணம் கிடைக்குமென்று முதலீடு செய்பவர்களை ஊக்குவித்து இறுதியில் அவர்களை சூதாட்டத்திற்கு அடிமையாக்குகின்றன. இதற்கான செயலிகள் ஆப் ஸ்டோர்களில் எளிதில் கிடைக்காது என்றாலும், சமூக வலைதள விளம்பரங்கள் மூலம் தங்களுக்குத் தேவையான பார்வையாளர்களை இலக்கு வைக்கின்றன.

ஆன்லைன் விளம்பரங்களின் பரவலான தன்மையால் இவை பயனர்களுக்கு எளிதாகக் கிடைப்பது இந்தச் சிக்கலை மேலும் அதிகரிக்கிறது. இத்தகைய சூதாட்ட செயலிகளில் பல கோடி ரூபாய் புழக்கத்தில் உள்ளது என அந்தப் புகாரில் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கில், தெலுங்கானா கேமிங் சட்டத்தின் பிரிவுகள் 3, 3(ஏ), மற்றும் 4; பிஎன்எஸ் இன் பிரிவு 49 உடன், பிரிவு 318(4) மற்றும் 112; ஐடி சட்டத்தின் பிரிவு 66-டி ஆகியவற்றின் கீழ் கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory