» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

தென் மாநிலங்களின் தொகுதிகள் குறையக் கூடாது: பிரதமருக்கு, ஜெகன் மோகன் கடிதம்

சனி 22, மார்ச் 2025 12:52:18 PM (IST)

தொகுதி மறுசீரமைப்பில் தென் மாநிலங்களின் தொகுதிகள் குறையக்கூடாது என்று வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கடிதம் உள்ளார். 

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக குரல் கொடுத்து வரும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா பஞ்சாப், மேற்கு வங்காளம் ஆகிய 6 மாநில முதல்-மந்திரிகள், ஒடிசா மாநில முன்னாள் முதல்-மந்திரி மற்றும் 7 மாநிலங்களை சேர்ந்த 29 அரசியல் கட்சி தலைவர்களுடன் சென்னையில் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் நடைபெற்றது.

இந்த நிலையில், தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆந்திரா முன்னாள் முதல்வரும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவருமான ஜெகன்மோகன் ரெட்டி கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில் மக்கள் தொகை அடிப்படையில் மறுசீரமைப்பு நடத்தினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விரிவாக விளக்கம் அளித்துள்ளார். 

மேலும் அந்த கடிதத்தில் "மக்களை தொகை அடிப்படையிலான தொகுதி மறுசீரமைப்பால் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறைய வாய்ப்பு உள்ளது. தற்போது இருக்கும் விகிதம் தொகுதி மறுசீரமைப்பிலும் தொடர வேண்டும். தொகுதி மறுசீரமைப்பில் தென் மாநிலங்களின் தொகுதி குறையக்கூடாது என்று வலியுறுத்தி உள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory