» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

எதிர்கால சந்ததியினருக்கு தண்ணீரைப் பாதுகாப்பது அவசியம்: பிரதமர் மோடி

சனி 22, மார்ச் 2025 5:33:10 PM (IST)

எதிர்கால சந்ததியினருக்கு தண்ணீரைப் பாதுகாப்பது அவசியம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்

நன்னீரின் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்காக ஆண்டுதோறும் மார்ச் 22ம் நாள் உலக தண்ணீர் தினம் ஐ.நா. சபையால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று உலக தண்ணீர் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி, தனது தலைமையிலான அரசு தண்ணீரை பாதுகாப்பது, நிலையான வளர்ச்சியை மேற்கொள்வது குறித்து நடவடிக்கை எடுத்து வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் மோடி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், தண்ணீர் நாகரிகங்களின் உயிர்நாடியாக இருந்து வருகிறது. எனவே எதிர்கால சந்ததியினருக்கு அதைப் பாதுகாப்பது மிகவும் அவசியம்' என தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory