» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

குடும்பக்கட்டுப்பாட்டில் வெற்றி பெற்ற மாநிலங்கள் தண்டிக்கப்பட கூடாது : காங்கிரஸ் கருத்து!

சனி 22, மார்ச் 2025 5:50:46 PM (IST)

குடும்பக்கட்டுப்பாட்டில் வெற்றி பெற்ற மாநிலங்கள் தண்டிக்கப்பட உள்ளன. இது ஏற்றுக்கொள்ள முடியாதது என காங்கிரஸ் கட்சி பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறினார்.

தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் குறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பு இல்லாமல், தொகுதி மறுசீரமைப்பு செய்ய முடியாது. மக்கள் தொகை கணக்கெடுப்பு எப்போது நடத்தப்படும்?தொகுதி மறுசீரமைப்பு அவசியமென்றாலும், மாநிலங்களின் பிரதிநிதித்துவம் எந்த வகையிலும் குறையக்கூடாது.

மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்கள் தொகுதிகளை இழப்பதை ஏற்க முடியாது. குடும்பக்கட்டுப்பாட்டில் வெற்றி பெற்ற மாநிலங்கள் தண்டிக்கப்பட உள்ளன. இது ஏற்றுக்கொள்ள முடியாதது. தொகுதி மறுசீரமைப்பால் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் பாதிக்கப்படக் கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory