» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ஆன்லைன் விளையாட்டுக்கு மாநில அரசு தடை விதிக்கலாம் : அஸ்வினி வைஷ்ணவ் விளக்கம்

வியாழன் 27, மார்ச் 2025 11:04:53 AM (IST)

ஆன்லைன் பந்தயம் விளையாட்டுக்கு தடை விதிக்க மாநிலங்கள் சட்டம் இயற்றலாம் என மக்களவையில் மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

மக்களவையில் கேள்வி நேரத்தின் போது, திமுக எம்.பி. தயாநிதி மாறன் பேசுகையில், ‘‘ஆன்லைன் விளையாட்டுக்கு தடைவிதிக்கும் தார்மீக கடமையிலிருந்து மத்திய அரசு விலகி செல்கிறதா? அனைத்து ஆன்லைன் விளையாட்டுகளுக்கும் தடை விதிக்க தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்துக்கு எவ்வளவு காலம் ஆகும்? ஆன்லைன் விளையாட்டுக்கு தமிழகம் தடைவிதித்துள்ளது’’ என்றார்.

இதற்கு பதில் அளித்த மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில், ‘‘ மத்திய அரசின் தார்மீக உரிமை குறித்து கேள்வி எழுப்ப தயாநிதி மாறனுக்கு உரிமை இல்லை. அரசியல் சாசனத்தில் உள்ள கூட்டாட்சி தத்துவத்தின்படி நாடு செயல்படுகிறது. 

ஆன்லைன் விளையாட்டு, பந்தயம் போன்றவற்றுக்கு தடை விதிப்பது மாநில அரசு சம்பந்தப்பட்ட விஷயங்களின் கீழ் வருகிறது. இவற்றுக்கு தடை விதிக்க மாநிலங்கள் சட்டம் இயற்றலாம். புகார்கள் அடிப்படையில் 1,410 ஆன்லைன் விளையாட்டு இணையதளங்களுக்கு ஏற்கெனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. இவற்றின் மீது பாரதிய நியாய் சன்கிதா சட்டத்தின் 112-வது பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியும் என அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory