» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
பாகிஸ்தானின் ட்ரோன் தாக்குதல் முயற்சிகள் நமது படைகளால் முறியடிக்கப்பட்டன: உமர் அப்துல்லா
வெள்ளி 9, மே 2025 5:52:30 PM (IST)

பாகிஸ்தானின் ட்ரோன் தாக்குதல்கள் நமது படைகளால் முறியடிக்கப்பட்டன என ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்தார்.
ஜம்மு முதல் ஜெய்சால்மர் வரையிலான எல்லைப் பகுதிகளில், பாகிஸ்தான் ட்ரோன்கள் , ராக்கெட்டுகள் மற்றும் ஏவுகணைகளை வீசியது. பாகிஸ்தான் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தி, தாக்குதல் முயற்சியை முறியடித்தனர். இந்நிலையில் ஜம்முவில் முதல்வர் உமர் அப்துல்லா நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.
பாகிஸ்தான் ஏவுகணை தாக்குதலால் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து பேசினார். பின்னர் அவர், செய்தியாளர்களிடம் கூறுகையில், "ஜம்முவில் பொதுமக்களை குறிவைத்து ட்ரோன்களைப் பயன்படுத்தி பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. இருப்பினும், நமது இந்திய பாதுகாப்புப் படைகள் விரைவாகவும், திறமையாகவும் செயல்பட்டு சதி முயற்சியை முறியடித்தனர்.
இந்த சூழ்நிலைகள் இந்தியாவால் உருவாக்கப்படவில்லை. பஹல்காமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலே காரணம். அங்கு அப்பாவி மக்கள் குறிவைத்து கொல்லப்பட்டனர். எல்லையின் இருபுறமும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு உமர் அப்துல்லா கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பாகிஸ்தானிற்கு நிதி வழங்குவதில் ஆழமான யோசனை தேவை : ஐஎம்எஃப்-க்கு இந்தியா வலியுறுத்தல்!
வெள்ளி 9, மே 2025 3:36:32 PM (IST)

தேசிய கல்விக் கொள்கையை எந்த மாநிலத்திலும் கட்டாயப்படுத்த முடியாது: உச்சநீதிமன்றம்
வெள்ளி 9, மே 2025 3:31:48 PM (IST)

ஐபிஎல் போட்டிகள் ஒரு வாரத்திற்கு நிறுத்தம்: பிசிசிஐ அறிவிப்பு!
வெள்ளி 9, மே 2025 3:25:42 PM (IST)

இந்தியா - பாகிஸ்தான் போர்ப் பதற்றம் எதிரொலி: ஐபிஎல் போட்டிகள் நிறுத்திவைப்பு!
வெள்ளி 9, மே 2025 12:49:44 PM (IST)

இந்தியாவின் 15 நகரங்களில் பாகிஸ்தான் தாக்குதல் முறியடிப்பு: பாதுகாப்பு துறை அறிவிப்பு
வியாழன் 8, மே 2025 4:34:49 PM (IST)

அபுதாபி லாட்டரியில் ரூ.57 கோடி பரிசு: கோடீஸ்வரர் ஆன கேரள தொழிலாளி!
வியாழன் 8, மே 2025 12:16:16 PM (IST)
