» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

வங்கக்கடலில் ழூழ்கிய சரக்கு கப்பல்: மாலுமிகளை கடலோர காவல் படை பத்திரமாக மீட்பு!

வெள்ளி 16, மே 2025 12:16:43 PM (IST)



வங்கக்கடலில் சரக்கு கப்பல் ழூழ்கி விபத்துக்குள்ளானதில், நடுக்கடலில் தத்தளித்த 6 மாலுமிகளையும் பத்திரமாக கடலோர காவல் படையினர் மீட்டனர். 

கர்நாடகாவின் மங்களூரு துறைமுகத்தில் இருந்து சிமெண்ட் உள்ளிட்ட கட்டுமான பொருட்களை ஏற்றிக்கொண்டு கடந்த 12ம் தேதி லட்சத்தீவுக்கு சரக்கு கப்பல் புறப்பட்டது. அந்த கப்பலில் 6 மாலுமிகள் பயணித்தனர். கப்பல் கடந்த 14ம் தேதி அதிகாலை 5.30 மணியளவில் வங்கக்கடலில் கப்பல் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக கப்பல் விபத்துக்குள்ளானது. 

பலத்த காற்றும் மற்றும் அலையில் சிக்கிய கப்பல் கடலில் மூழ்கத் தொடங்கியது. இதையடுத்து கப்பலில் இருந்த மாலுமிகள் அனைவரும் கப்பலில் இருந்த சிறிய ரக படகில் ஏறி உயிர் தப்பினர். ஆனால், சரக்கு கப்பல் மூழ்கியது. படகில் ஏறிய மாலுமிகள் அனைவரும் நடுக்கடலில் தத்தளித்தனர். 

அப்போது, அவ்வழியாக வந்த மற்றொரு கப்பலில் பயணித்தவர்கள் சரக்கு கப்பல் விபத்துக்குள்ளானது குறித்து மங்களூருவில் உள்ள கடலோர காவல் படைக்கு தகவல் கொடுத்தனர். இந்நிலையில், தகவலறிந்து விரைந்து வந்த கடலோர காவல் படையினர் நடுக்கடலில் தத்தளித்த 6 மாலுமிகளையும் பத்திரமாக மீட்டனர். அவர்கள் அனைவரும் மங்களூருவுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory