» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
முகம்மது ஷமி முன்னாள் மனைவிக்கு மாதம் ரூ.4 லட்சம் ஜீவனாம்சம் வழங்க நீதிமன்றம் உத்தரவு
புதன் 2, ஜூலை 2025 11:49:25 AM (IST)
இந்திய கிரிக்கெட் வீரர் முகம்மது ஷமி அவரது முன்னாள் மனைவிக்கு மாதம் ரூ.4 லட்சம் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்று கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் வீரர் முகம்மது ஷமிக்கும் ஹசின் ஜஹானுக்கும் கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு 2015 ஆம் ஆண்டு ஒரு மகள் பிறந்தார். திருமணம் முடிந்த நான்கு ஆண்டுகளுக்குள் இந்த ஜோடிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. முகம்மது ஷமி தன்னை துன்புறுத்துவதாக 2018-ல் ஜஹான் போலீஸ் நிலையத்தில் புகாரளித்தார். இதையடுத்து, இருவரும் விவாகரத்து பெற்றுக்கொண்டனர். விவாகரத்து பெற்ற நிலையில், ஜீவனாம்சம் கோரி நீதிமன்றத்தில் ஹசின் ஜஹான் வழக்கு தொடர்ந்தார். விவாகரத்து வழக்கில் மனைவி ஹசின் ஜஹான் மாதம் ரூ 10 லட்சம் ஜீவனாம்சம் கோரிய நிலையில், ரூ.1.3 லட்சம் வழங்க அலிபூர் நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. இதை எதிர்த்து ஹசின் மேல் முறையீடு செய்து இருந்தார். இந்த மனுவை விசாரித்த கொல்கத்தா உயர் நீதிமன்றம் ரூ 4 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அமெரிக்கா, நம்பத் தகுந்த நாடு அல்ல: எங்கே போனது மோடி - டிரம்ப் நட்பு? ரகுராம் ராஜன் கேள்வி!
திங்கள் 10, நவம்பர் 2025 5:12:29 PM (IST)

உடல் உறுப்புகளை தானத்திற்காக இறந்த பெண்ணின் உடலில் ரத்த ஓட்டம்: டாக்டர்கள் சாதனை!
திங்கள் 10, நவம்பர் 2025 3:29:53 PM (IST)

எஸ்ஐஆர் படிவத்தை ஆன்லைன் மூலம் பூர்த்தி செய்யலாம் - தேர்தல் ஆணையம் அறிவிப்பு
திங்கள் 10, நவம்பர் 2025 10:30:36 AM (IST)

பத்மநாபசாமி கோவிலில் 107 கிராம் தங்கம் மாயம் : 6 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை...!
ஞாயிறு 9, நவம்பர் 2025 9:24:57 AM (IST)

வளர்ச்சிப் பாதையில் இந்தியா : வந்தே பாரத் ரயில்களை துவக்கி பிரதமர் மோடி பேச்சு!
சனி 8, நவம்பர் 2025 12:29:52 PM (IST)




