» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

தெரு நாய்களை வீட்டுக்கு அழைத்துச் சென்று ஏன் உணவு அளிக்கக் கூடாது? - உச்ச நீதிமன்றம் கேள்வி

புதன் 16, ஜூலை 2025 10:21:28 AM (IST)



தெரு நாய்களை வீட்டுக்கு அழைத்துச் சென்று ஏன் உணவு அளிக்கக் கூடாது? என்று வழக்கு தொடர்ந்தவரிடம் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

தெரு​ நாய்​களுக்கு உணவளிக்​கும் விவ​காரம் தொடர்​பாக டெல்​லியைச் சேர்ந்த ஒரு​வர் உச்ச நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்​துள்​ளார்.  அந்த மனு​வில் அவர் கூறும்​போது, "தெரு​நாய்​களுக்கு உணவளிப்​ப​தற்​காக தனி​யான இடங்​களைத் தேர்வு செய்து அமல்​படுத்த வேண்​டும். கண்ட இடங்​களில் தெரு​நாய்​களுக்கு உணவு வழங்​கக்​கூ​டாது. 

இதுதொடர்​பான வழக்​கில் அலகா​பாத் உயர் நீதி​மன்​றம் வழி​காட்டு​தல்​களை வழங்​கி​யுள்​ளது. தெரு​ நாய்​களுக்கு உணவு அளிப்​ப​தில் நாங்​கள் விதி​களை பின்​பற்​றுகிறோம். டெல்லி கிரேட்​டர் நொய்​டா​வில் தெரு​நாய்​களுக்கு வழங்க இது​போன்ற உணவு மையங்​கள் உரு​வாக்​கப்​பட்​டாலும், நொய்டா அதி​காரி​கள் இன்​னும் அவற்றை செயல்​படுத்​த​வில்​லை.

எனவே, தெரு​நாய்​களுக்​கான உணவு மையங்​களை அதி​காரி​கள் உரு​வாக்கி பராமரிக்க நீதி​மன்​றம் உத்​தர​விட வேண்​டும்’’ என்றார். இந்த மனு உச்ச நீதி​மன்ற நீதிப​தி​கள் விக்​ரம் நாத், சந்​தீப் மேத்தா ஆகியோர் அடங்​கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்​தது. அப்​போது நீதிபதி விக்​ரம் நாத், மனு​தா​ரரின் வழக்​கறிஞரை பார்த்து கேள்​வியெழுப்​பி​னார்.

அவர் கூறும்​போது, "தெரு​நாய்​களுக்கு இந்த நகரில் அனைத்து இடங்​களும் உள்​ளன. மனிதர்​களுக்​குத்​தான் இல்​லை. நாங்​கள் உங்​களுக்கு (மனு​தா​ரர்) ஒரு யோசனையை வழங்​கு​கிறோம். உங்​கள் சொந்த வீட்​டில் ஒரு தங்​குமிடத்​தைத் திறந்து வைத்​து, இந்த சமூகத்​தில் உள்ள அனைத்து நாய்​களுக்கு உங்​கள் வீட்​டிலேயே உணவளிக்க ஏற்​பாடு செய்​யுங்​கள்.

நீங்​கள் காலை​யில் தினந்​தோறும் சைக்​கிள் ஓட்டி பயிற்​சி​யில் ஈடு​படு​கிறீர்​களா? இந்​தக் கேள்விக்​குப் பதில் ஆமாம் என்​றால் சைக்​கிளில் செல்​பவர்​களும், காலை​யில் நடைப​யிற்சி மேற்​கொள்​பவர்​களும், இரு சக்கர வாகன ஓட்​டிகளும் நாய்​களால் ஆபத்தை எதிர்​கொள்​கின்​றனர். தெரு​நாய்​களால் அவர்​களது வாழ்​வுக்கு அதிக அச்சுறுத்தல் உள்​ளது” என்​றார். 

இதைத் தொடர்ந்து மனுவை விசா​ரித்த நீதிப​தி​கள், தற்​போது நடை​பெற்று வரும் ஒரு வழக்​கிலும் இதே​போன்ற கவலைகள் தெரிவிக்​கப்​பட்​டுள்ளன என்​றும், இந்த மனுவை, முந்தைய மனுக்​களு​டன் சேர்த்து வி​சா​ரிக்​கிறோம்​ என்​றும்​ தெரி​வித்​தனர்​.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory