» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

வீடியோவை காட்டி மிரட்டி கல்லூரி மாணவி பலாத்காரம்: பேராசிரியர்கள் உட்பட 3பேர் கைது!

புதன் 16, ஜூலை 2025 5:44:03 PM (IST)

கர்நாடகாவில் கல்லூரி மாணவியை மிரட்டி தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த 2 பேராசிரியர்கள் உட்பட 3பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.  

கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் மூடபித்ரியில் உள்ள தனியார் கல்லூரியில் ஒரு மாணவி படித்து வருகிறார். அதே கல்லூரியில் இயற்பியல் பேராசிரியராக நரேந்திரா என்பவரும், உயிரியல் பேராசிரியராக சந்தீப் என்பவரும் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் இயற்பியல் பாடத்தில் குறிப்பு வழங்குவதாக கூறி, மாணவியை நரேந்திரா பெங்களூருவுக்கு அழைத்து சென்றார். 

அங்கு அவர்கள் மாரத்தஹள்ளியில் அறை எடுத்து தங்கினர். அப்போது நரேந்திரா, மாணவியை மிரட்டி பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. மேலும் அதனை நரேந்திரா தனது செல்போனில் வீடியோ, புகைப்படம் எடுத்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த உயிரியல் பேராசிரியர் சந்தீப்பும் அந்த ஆபாச வீடியோவை காண்பித்து மாணவியை மிரட்டி பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. மேலும், இதுபற்றி அறிந்த சந்தீப்பின் நண்பரான அனூப் என்பவரும் அந்த மாணவியை மிரட்டி பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. 

பேராசிரியர்கள் உள்பட 3 பேரால் சீரழிக்கப்பட்ட மாணவி, அவர்களின் மிரட்டலுக்கு பயந்து தனக்கு நேர்ந்த கொடுமையை வெளியே கூறவில்லை. இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டு அவர்கள் தொடர்ந்து மாணவியை பலாத்காரம் செய்து வந்ததாக தெரிகிறது. 3 பேரின் தொல்லை அதிகரிக்கவே நடந்த சம்பவங்கள் பற்றி மாணவி, தனது பெற்றோரிடம் கூறி கதறி அழுதார். 

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள், பெங்களூரு மாரத்தஹள்ளி போலீசில் புகார் அளித்தனர். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பேராசிரியர்கள் நரேந்திரா, சந்தீப், அனூப் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். அவர்கள் 3 பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory