» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
சுங்கச்சாவடிகளில் வருடாந்திர கட்டணம்: இதுவரை 5 லட்சம் பேர் பாஸ் பெற்றதாக தகவல்!
புதன் 20, ஆகஸ்ட் 2025 10:52:43 AM (IST)
இந்தியாவில் கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி முதல் ஃபாஸ்ட்டேக் கார்டுகளுக்கான வருடாந்திர பாஸ் முறை அமலுக்கு வந்தது. இந்த திட்டம் வாகன ஓட்டிகள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்தியாவில் உள்ள தேசிய சுங்கசாவடிகளை கடந்து செல்ல தனிநபர் வாகன உரிமையாளர்களுக்கான வருடாந்திர பாஸ் முறையை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. வெறும் ரூ3000 செலுத்தி இந்த பாஸை பெற்றுவிட்டால் சுமார் 200 சுங்கசாவடிகளை ஒராண்டிற்குள் கடந்து செல்ல முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து செலவு வெகுவாக குறையும்.
இந்நிலையில் இந்த பாஸ் கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்ட நாள் அன்றே சுமார் 1 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் இந்த பாஸை வாங்கிவிட்டதாக தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில் இதுவரை 5 லட்சம் பேர் இந்த பாஸை வாங்கிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதில் தமிழ்நாட்டில்தான் அதிக எண்ணிக்கையிலான பாஸ் வாங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. இதை தொடர்ந்து கர்நாடக மாநிலமும், அதை தொடர்ந்து ஹரியானா மாநிலயும் இருக்கிறது. இந்த 4 நாட்களில் அதிகமாக மக்கள் சுங்கசாவடியை இந்த பாஸை பயன்படுத்தி கடந்த 4 நாட்களில் கடந்து சென்றதும் தமிழகத்தில் தான் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை தொடர்ந்து கர்நாடகா மற்றும் ஆந்திர மாநிலம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழவதும் உள்ள 1150 சுங்கசாவடிகளில் இந்த பாஸை பயன்படுத்த முடியும். அதாவது தேசிய நெடுஞ்சாலைகள், எக்ஸ்பிரஸ் சாலைகளில் உள்ள சுங்கசாவடியில் மட்டுமே இந்த பாஸ் செல்லுபடியாகும். மாநில நெடுஞ்சாலைகள், உள்ளாட்சி அமைப்பால் உருவாக்கப்பட்ட சுங்கசாவடிகளில் இந்த பாஸை பயன்படுத்த முடியாது.
இந்த பாஸை வாங்க ரூ3000 கட்டணம் செலுத்த வேண்டும். இதை பயன்படுத்தி 200 சுங்கசாவடிகளை கடந்து செல்ல முடியும். அதாவது ஒரு சுங்கசாவடிக்கு ரூ15 செலவாகும். இதற்கு முன்னர் நூற்றுக்கணக்கில் சுங்கசாவடிக்கு மக்கள் கட்டணம் செலுத்தி வந்த நிலையில் இந்த பாஸ் மக்கள் பலருக்கு பயனுள்ளதாக இருக்கிறது.
நீங்கள் இந்த பாஸை எடுக்கவில்லை என்றால் ராஜ்மார்க் யாத்ரா என்ற செயலியை உங்கள் செல்போனில் டவுண்லோடு செய்து அதில் உங்கள் வாகன பதிவெண்ணை பதிவிட்டு இந்த பாஸை எடுக்க வேண்டும். ஒருமுறை உங்கள் பாஸ் ஆக்டிவேட் ஆகிவிட்டால் 200 சுங்கசாவடிகளை ஒராண்டிற்குள் கடக்கவேண்டும். ஒராண்டி முடிவதற்குள் நீங்கள் 200 சுங்கசாவடிகளை கடந்துவிட்டால் பின்னர் நீங்கள் மீண்டும் ரூ3000 செலுத்தி பாஸை புதுப்பித்துக்கொள்ள முடியும்.
ஒரு வேலை நீங்கள் வருடாந்திர பாஸ் வாங்கி 365 நாட்களுக்குள் 200 சுங்கசாவடியை கடக்க முடியவில்லை என்றால் 1 ஆண்டிற்கு பிறகு காலாவதியாகிவிடும் மீண்டும் நீங்கள் ரூ3000 கட்டணம் செலுத்தி 200 சுங்கசாவடிகளை கடந்து செல்லும் பாஸை வாங்க வேண்டும். அப்பொழுது தான் நீங்கள் இந்த பாஸ் மூலம் பயணம் செய்ய முடியும். பழைய பாஸில் மீதம் உள்ள சுங்கசாவடிகடப்பு எண்ணிக்கை இதில் சேர்க்கப்பட மாட்டாது.
இந்த பாஸ் இந்திய மக்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. முக்கியமாக தமிழர்கள் பலர் இந்த பாஸை அதிகம் பயன்படுத்த வருவது இதன் மூலம் நமக்கு தெளிவாக தெரிகிறது. மேலும் தமிழகத்தில் அதிகமான சுங்கசாவடிகள் இருப்பதால் இதன்பயன்பாடு தமிழகத்தில் அதிகம் இருப்பது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தெருநாய்களை காப்பகத்துக்கு அனுப்ப தடை : உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
வெள்ளி 22, ஆகஸ்ட் 2025 11:25:38 AM (IST)

ஜிஎஸ்டியில் 12 மற்றும் 28 சதவீத வரி விகிதங்களை நீக்க நிதியமைச்சர்கள் கூட்டத்தில் ஒப்புதல்
வியாழன் 21, ஆகஸ்ட் 2025 5:39:23 PM (IST)

பொய் வழக்குகள்: வக்கீலுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
வியாழன் 21, ஆகஸ்ட் 2025 10:56:38 AM (IST)

டெல்லி முதல்-அமைச்சர் மீது தாக்குதல்: கைதான வாலிபருக்கு 5 நாட்கள் போலீஸ் காவல்!
வியாழன் 21, ஆகஸ்ட் 2025 10:45:20 AM (IST)

முதல்வர், அமைச்சர்களை பதவி நீக்கம் செய்யும் மசோதா தாக்கல் : கிழித்தெறிந்த எதிர்க்கட்சிகள்!
புதன் 20, ஆகஸ்ட் 2025 4:19:17 PM (IST)

துணை ஜனாதிபதி தேர்தல்: பிரதமர் முன்னிலையில் சி.பி. ராதாகிருஷ்ணன் வேட்புமனு தாக்கல்!
புதன் 20, ஆகஸ்ட் 2025 3:37:11 PM (IST)
