» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

முதல்வர், அமைச்சர்களை பதவி நீக்கம் செய்யும் மசோதா தாக்கல் : கிழித்தெறிந்த எதிர்க்கட்சிகள்!

புதன் 20, ஆகஸ்ட் 2025 4:19:17 PM (IST)

அமைச்சர்கள், முதல்வர்களின் பதவிப்பறிப்பு மசோதாக்களுக்கு எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து மசோதா நகலை கிழித்து எறிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா 3 மசோதாக்களை முன்மொழிந்தார். அரசியலமைப்பு மசோதா (130ஆவது திருத்தம்), யூனியன் பிரதேசங்களின் அரசு திருத்த மசோதா, ஜம்மு - காஷ்மீர் மறுசீரமைப்பு திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்களை அமித் ஷா முன்மொழிந்தார்.

அமைச்சர்கள், முதல்வர்கள், பிரதமரோ தொடர்ச்சியாக 30 நாள்கள்வரையில் காவலில் வைக்கப்பட்டால், 31 ஆவது நாளில் அவர்கள் தன்னிச்சையாகவே பதவிநீக்கம் செய்யப்படுவர் என்ற மசோதாவை அமித் ஷா கூறினார். இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

மசோதாவின் நகல்களை எதிர்க்கட்சிகள் கிழித்ததுடன், அதனை அமித் ஷா அருகே தூக்கியெறிந்தனர்.மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சியினர், தேர்தல் ஆணையத்தைத் தவறாக பயன்படுத்த முயற்சித்தது தோல்வியடைந்ததால், தற்போது எதிர்க்கட்சிகளைக் குறிவைத்து ஜனநாயகத்தை நசுக்குவதற்கும் மாநில அரசுகளைக் கவிழ்ப்பதற்கும் மற்றொரு உத்தியை அரசு செயல்படுத்துகிறது என்று குற்றம் சாட்டினர்.

இருப்பினும், மசோதாக்களை ஆய்வு செய்ய, அவற்றை ஒரு கூட்டுக் குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்று அமித் ஷா தெரிவித்தார். பணி நியமன முறைகேடு வழக்கில் முன்னாள் மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியும், தில்லி மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் முன்னாள் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கைது செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. அரவிந்த கேஜரிவால், சிறையிலிருந்தவாறே தனது முதல்வர் பொறுப்புகளைக் கவனித்து வந்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory