» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ஜிஎஸ்டியில் 12 மற்றும் 28 சதவீத வரி விகிதங்களை நீக்க நிதியமைச்சர்கள் கூட்டத்தில் ஒப்புதல்

வியாழன் 21, ஆகஸ்ட் 2025 5:39:23 PM (IST)

ஜிஎஸ்டி முறையில் 12% மற்றும் 28% வரி அடுக்கை நீக்கும் பரிந்துரைக்கு நிதியமைச்சர்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது. 

இந்தியாவில் முறைமுக வரியை எளிமைப்படுத்தக் கடந்த 2017ல் ஜிஎஸ்டி கொண்டு வரப்பட்டது. ஜிஎஸ்டி வரி முறை வந்த பிறகு இப்போது அனைத்து மாநிலங்களிலும் ஒரே முறையில் ஜிஎஸ்டி வசூலிக்கப்படுகிறது. இதில் பல்வேறு அடுக்குகள் இருப்பதால் ஜிஎஸ்டி வரி முறையை எளிமையாக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ஜிஎஸ்டி முறையில் மிகப் பெரிய சீர்திருத்தம் கொண்டு வரப்படும் என்று பிரதமர் மோடி தனது சுதந்திர தின உரையில் குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து மத்திய அரசும் 12% மற்றும் 28% வரி அடுக்கை நீக்கப் பரிந்துரை அளித்திருந்தது. இதற்கிடையே இந்த பரிந்துரைக்கு ஜிஎஸ்டி அமைச்சர்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது. அடுத்த கட்டமாக இது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முன்மொழியப்படும். அடுத்த மாதம் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அப்போது இது அங்கு முன்மொழியப்படும். அங்கும் இதற்கான ஒப்புதல் கிடைத்தால், இதன் மூலம் பல்வேறு பொருட்கள் மீதான வரி குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory