» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

இந்தியாவின் கலாச்சார, தேசிய உணர்வை ஒளிரச் செய்தார்: பாரதிக்கு பிரதமர் மோடி புகழாரம்!

வியாழன் 11, டிசம்பர் 2025 10:56:32 AM (IST)



இந்தியாவின் கலாச்சார, தேசிய உணர்வை ஒளிரச்  செய்தவர் பாரதியார் என்று பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார். 

கவிஞர், எழுத்தாளர், விடுதலை போராட்ட வீரர், சமூக சீர்திருத்தவாதி என பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய மகாகவி பாரதியாரின் 143-வது பிறந்தநாள் இன்று (டிசம்பர் 11-ம் தேதி) கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பிரதமர் மோடி தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது: மகாகவி சுப்ரமணிய பாரதியின் பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன்.. அவரது கவிதைகள் துணிவைத் தூண்டின, அவரது சிந்தனைகள் எண்ணற்ற மக்களின் மனதில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தும் ஆற்றலைக் கொண்டிருந்தன. 

இந்தியாவின் கலாச்சார, தேசிய உணர்வை அவர் ஒளிரச் செய்தார். நீதியான, அனைவரையும் உள்ளடக்கிய ஒரு சமூகத்தை உருவாக்க அவர் பாடுபட்டார். தமிழ் இலக்கியத்தை செழுமைப்படுத்துவதில் அவர் ஆற்றிய பங்களிப்புகளும் ஒப்பிலாதவை. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory