» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
அடுத்த ஆண்டு முதல் ஆன்லைனில் நீட் தேர்வு: மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவிப்பு!
வெள்ளி 15, மே 2026 12:44:50 PM (IST)
மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வில் நிலவும் முறைகேடுகளைத் தவிர்க்கும் விதமாக, அடுத்த ஆண்டு முதல் இத்தேர்வை ஆன்லைன் முறையில் நடத்தத் திட்டமிட்டுள்ளதாக மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
கடந்த மே 3-ஆம் தேதி நடைபெற்ற இளநிலை நீட் தேர்வின் வினாத்தாள், ராஜஸ்தான் மாநிலத்தில் கசிந்தது அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டது. இத்தேர்வின் நம்பகத்தன்மை குறித்து எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், மே 3-ஆம் தேதி நடைபெற்ற தேர்வை ரத்து செய்வதாகத் தேசிய தேர்வு முகமை (NTA) நேற்று அறிவித்தது.ரத்து செய்யப்பட்ட தேர்வுக்குப் பதிலாக, ஜூன் 21-ஆம் தேதி மறுதேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மறுதேர்வுக்கு மாணவர்கள் புதிதாக விண்ணப்பிக்கத் தேவையில்லை. புதிய ஹால் டிக்கெட் மற்றும் தேர்வு மையங்கள் குறித்த விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.
வினாத்தாள் கசிவு தொடர்பாக விளக்கம் அளித்த மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியதாவது: "தேசிய தேர்வு முகமையை மேலும் பலப்படுத்தும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. முறைகேடுகள் தொடர்பாக சிபிஐ பாரபட்சமற்ற விசாரணையை நடத்தும். எதிர்காலத்தில் இத்தகைய தவறுகள் நடக்காமல் இருக்க, அடுத்த ஆண்டு முதல் நீட் நுழைவுத் தேர்வை ஆன்லைனில் நடத்தத் திட்டமிட்டுள்ளோம்" என்று தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

எம்ஜிஆர், ஜெயலலிதா வரிசையில் விஜய்: கொல்லூர் மூகாம்பிகை கோவிலில் சுவாமி தரிசனம்...!
வெள்ளி 12, ஜூன் 2026 5:43:40 PM (IST)

மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு: குடியரசுத் தலைவர் மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு
வெள்ளி 12, ஜூன் 2026 4:32:09 PM (IST)

ஓமனில் எண்ணெய்க் கப்பலை தாக்கிய அமெரிக்கா: 3 மாலுமிகள் பலி - இந்தியா கண்டனம்!
வியாழன் 11, ஜூன் 2026 4:01:42 PM (IST)

மேற்கு வங்கத்தில் திரிணமூல் கூடாரம் சரிந்தது: ஒரே வாரத்தில் 3-ஆவது எம்பி அதிரடி ராஜிநாமா!
வியாழன் 11, ஜூன் 2026 12:39:46 PM (IST)

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை நேரில் சந்தித்துப் பேசினார் முதல்வர் ச.ஜோசப் விஜய்!
புதன் 10, ஜூன் 2026 5:46:14 PM (IST)

பாரதிராஜா மறைவு இந்திய திரையுலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு : சந்திரபாபு நாயுடு இரங்கல்!
புதன் 10, ஜூன் 2026 5:11:50 PM (IST)


