» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

முதல்வர் விஜய் கரூர் செல்ல தடையில்லை: தி.மு.க. மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்!

செவ்வாய் 7, ஜூலை 2026 12:51:24 PM (IST)

CmVijaySupreme.jpg

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரைத் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவதற்கும், அரசு உதவிகளை வழங்குவதற்கும் தடை விதிக்கக் கோரி தி.மு.க. சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

கரூா் நெரிசல் சம்பவம் தொடா்பான போலீஸ் விசாரணையைப் பாதிக்கும் வகையிலோ, நிலுவையில் உள்ள விசாரணை குறித்தோ முதலமைச்சரோ அல்லது அமைச்சர்களோ பொதுவெளியில் கருத்துகளைத் தெரிவிக்கக் கூடாது என உத்தரவிடக் கோரியும், முதலமைச்சர் விஜய் கரூர் செல்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் தி.மு.க. சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதிகள் அசானுதீன் அமானுல்லா, ஷீல் நாகு ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களை முதலமைச்சர் சந்திப்பது எவ்வாறு சாட்சிகள் மீது ஆதிக்கம் செலுத்துவதாக அமையும் எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், முதலமைச்சரின் பயணத்தையோ அல்லது அவரது பேச்சையோ நீதிமன்றம் எவ்வாறு கட்டுப்படுத்த முடியும் எனக் கூறி தி.மு.க.விற்குக் கடுமையான கண்டனம் தெரிவித்தனர்.

வழக்கு வாதத்தின்போது, கரூர் சம்பவத்தில் முதலமைச்சர் விஜய் குற்றஞ்சாட்டப்பட்டவர் எனத் தி.மு.க. வக்கீல் குறிப்பிட்டார். இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்த உச்ச நீதிமன்றம், கரூர் பலி வழக்கில் முதலமைச்சர் விஜய் பெயர் குற்றஞ்சாட்டப்பட்டவராக எங்கும் சேர்க்கப்படவில்லை என்பதைத் திட்டவட்டமாகச் சுட்டிக்காட்டியது.

விசாரணையின் நிறைவாக, முதலமைச்சரின் கரூர் பயணம் வழக்கின் விசாரணையைத் திசைதிருப்பும் என்ற தி.மு.க.வின் குற்றச்சாட்டை நிராகரித்த நீதிபதிகள், மனுவைத் திரும்பப் பெறுமாறு அறிவுறுத்தினர்; தவறினால் மனுத் தள்ளுபடி செய்யப்படும் என எச்சரித்ததைத் தொடர்ந்து, அந்த மனு முழுமையாகத் தள்ளுபடி செய்யப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory