» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ராமர் கோவிலில் கொள்ளையடித்தவர்களைத் தூக்கிலிடும் வரை ஓய மாட்டோம்: கேஜ்ரிவால் உறுதி!

திங்கள் 13, ஜூலை 2026 11:47:18 AM (IST)

KejriwalRamtemple.jpg

அயோத்தி ராமர் கோவில் காணிக்கை திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்குக் கடுமையான தூக்கு தண்டனை பெற்றுத் தரும் வரை தங்களது போராட்டம் ஓயாது என ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

அயோத்தி ராமர் கோவில் காணிக்கை திருட்டைக் கண்டித்தும், குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் ஆம் ஆத்மி கட்சி சார்பில் டெல்லியில் உள்ள ஜப்பான் பூங்காவில் சுந்தர காண்ட பாராயணம் நடைபெற்றது. இப் பாராயண நிகழ்வில் கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவால், சுனிதா கேஜ்ரிவால், கட்சியின் மூத்த தலைவர் மணீஷ் சிசோடியா உட்பட நூற்றுக்கணக்கான ஆம் ஆத்மி தொண்டர்கள் பங்கேற்றனர்.

நிகழ்வின் தொடர்ச்சியாக, ராமர் கோவில் காணிக்கை திருட்டில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தும் கூட்டு உறுதிமொழி வாசிக்கப்பட்டது. இதனை முன்னிட்டுப் பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பும் வகையில் தயாரிக்கப்பட்ட கடிதத்தில் பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் கையெழுத்திடும் பிரம்மாண்ட கையெழுத்து இயக்கத்தை அரவிந்த் கேஜ்ரிவால் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய அரவிந்த் கேஜ்ரிவால், ஸ்ரீ ராம ஜென்மபூமியில் நடைபெற்ற கொள்ளைச் சம்பவம் மற்றும் நில மோசடிகள் உலகம் முழுவதும் உள்ள ராம பக்தர்களின் மனதை புண்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டார். கடவுளின் பெயரால் கோடிக்கணக்கான பக்தர்கள் வழங்கிய பணம் திருடப்பட்டுள்ளதாகவும், கோவில் கட்டப்படும் போதே பெருமளவில் கமிஷன் பெறும் நடவடிக்கைகள் நடந்துள்ளதாகவும் குற்றம் சாட்டினார்.

மேலும், 40 நாட்களில் 70 திருட்டுச் சம்பவங்கள் சிசிடிவி (CCTV) கேமராவில் பதிவாகியுள்ள நிலையில், அதற்கான 8 மாத கால சிசிடிவி பதிவுகள் திட்டமிட்டு அழிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். ஆளும் தரப்புடன் தொடர்புடைய அமைப்புகளைச் சேர்ந்தவர்களே இக் கொள்ளையில் ஈடுபட்டுள்ளதால், ஒட்டுமொத்த அரசு அமைப்பும் கொள்ளையர்களைப் பாதுகாப்பதிலேயே ஈடுபட்டுள்ளது என்றும், குற்றவாளிகளுக்குத் தண்டனை கிடைக்கும் வரை ஒவ்வொரு பக்தரும் உறுதியுடன் போராட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory