» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
பாலியல் புகார் அளித்த சிறுமி உட்பட 6 பேர் கொடூர கொலை: போக்சோ குற்றவாளி வெறிச்செயல்!
சனி 11, ஜூலை 2026 11:41:29 AM (IST)
ஹைதராபாத் ஷபாத் நகருக்கு அருகில் உள்ள கிராமத்தில், போக்சோ வழக்கில் கைதாகி பிணையில் வெளியே வந்த விவசாயி ஒருவர், தன் மீது பாலியல் புகார் அளித்த 16 வயது சிறுமி, அவரது குடும்பத்தினர் 2 பேர், தனது மனைவி மற்றும் 2 கைக்குழந்தைகள் உட்பட 6 பேரைக் கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டுத் தப்பியோடியுள்ளார்.
கொலைக்குற்றவாளியான விவசாயி மீது கடந்த மே மாதம் 16 வயது சிறுமியின் குடும்பத்தினர் பாலியல் வன்கொடுமைப் புகார் அளித்தனர். இப் புகாரில் கைதாகி சிறையிலிருந்த அவர் அண்மையில் பிணையில் வெளியே வந்துள்ளார். தன் மீது புகார் அளித்த குடும்பத்தினரைப் பழிவாங்கத் திட்டமிட்ட அவர், நள்ளிரவில் சிறுமியின் வீட்டுக்குச் சென்று கதவைத் தட்டியுள்ளார்.
கதவைத் திறந்த சிறுமியின் தாயைக் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார். தொடர்ந்து வீட்டிற்குள் நுழைந்து உறங்கிக் கொண்டிருந்த 60 வயது பாட்டியையும் குத்திக் கொலை செய்துள்ளார். எனினும், அதே வீட்டில் இருந்த மனநலம் பாதிக்கப்பட்ட 20 வயது சகோதரியை அவர் எதுவும் செய்யவில்லை. பின்னர், 16 வயது சிறுமியைத் தனது காரில் வலுக்கட்டாயமாகக் கடத்திச் சென்று, கிராமத்தின் அருகிலுள்ள குளத்தில் கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை நீரில் வீசியுள்ளார்.
இதைத் தொடர்ந்து, இரவு 11:21 மணி அளவில் தனது சொந்த வீட்டுக்குத் திரும்பிய அவர், தனது 31 வயது மனைவி, 4 வயது மற்றும் 18 மாதங்களே ஆன தனது இரண்டு மகன்களையும் கொடூரமாகக் கொலை செய்துள்ளார். இக் கொலைகளைச் செய்து முடித்த பின், தனது தந்தைக்குத் தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்துவிட்டு காரில் தப்பியோடியுள்ளார்.
தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர், 6 பேரின் உடல்களையும் கைப்பற்றிக் கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தப்பியோடிய கொலைக் குற்றவாளியைப் பிடிக்கக் காவல்துறையினர் தனிப்படைகள் அமைத்துத் தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மாணவர்கள் முற்றுகைப் போராட்டம்: தடியடி, கண்ணீர் புகைக் குண்டுவீச்சு; போர்க்களமான சட்டமன்ற வளாகம்!
செவ்வாய் 11, ஆகஸ்ட் 2026 8:36:38 AM (IST)

காவிரி நீரை உடனடியாகத் திறக்கக் கோரி தமிழக அரசு மனு: ஆகஸ்ட் 13-ல் உச்ச நீதிமன்றம் விசாரணை!
திங்கள் 10, ஆகஸ்ட் 2026 4:16:13 PM (IST)

டேட்டிங் செயலிகள் மூலம் தொழிலதிபர்களை மிரட்டி ரூ.6 கோடி பறித்த பெண்: அதிர்ச்சித் தகவல்கள்!
திங்கள் 10, ஆகஸ்ட் 2026 11:05:15 AM (IST)

இமாசலப் பிரதேசத்தில் மலைப்பாதையில் பஸ் கவிழ்ந்து 7 பேர் பலி; 11 பயணிகள் காயம்
ஞாயிறு 9, ஆகஸ்ட் 2026 9:35:28 AM (IST)

யூபிஐ, ரூபே கார்டு பரிவர்த்தனைக் கட்டணம்: : மக்களவையில் மசோதா நிறைவேற்றம்!
சனி 8, ஆகஸ்ட் 2026 5:36:51 PM (IST)

நீட் வினாத்தாளை பேராசிரியர்களே விற்றனர்: சிபிஐ குற்றப்பத்திரிகையில் அதிர்ச்சித் தகவல்!
சனி 8, ஆகஸ்ட் 2026 12:10:37 PM (IST)


