» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
இந்திய அஞ்சல் துறை பெயரில் புதிய வகை சைபர் மோசடி: பொதுமக்களுக்கு சிபிஐ அறிவுறுத்தல்!
வியாழன் 23, ஜூலை 2026 11:08:23 AM (IST)

இந்திய அஞ்சல் துறையின் பெயரில் பரவி வரும் புதிய வகை சைபர் மோசடி குறித்து மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) பொதுமக்களுக்கு முக்கிய எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து சிபிஐ-யின் அதிகாரப்பூர்வ எக்ஸ் (X) சமூக வலைதளப் பக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது: சைபர் குற்றவாளிகள் பொதுமக்களின் செல்போன் எண்களுக்கு எஸ்.எம்.எஸ் (SMS) அல்லது வாட்ஸ்அப் (WhatsApp) மூலம் குறுஞ்செய்தி ஒன்றை அனுப்புகிறார்கள். அதில், "உங்களுடைய பார்சல் முகவரி சரியாக இல்லாததால் டெலிவரி செய்ய முடியவில்லை. அதை மீண்டும் டெலிவரி செய்ய சிறிய தொகையை ஆன்லைனில் செலுத்தவும்" என்று கூறி, ஒரு இணையதள லிங்க்-உடன் (Link) செய்தி அனுப்புகின்றனர்.
அந்த லிங்கை கிளிக் செய்தால், அது அஞ்சல் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளம் போன்றே அச்சு அசலாக வடிவமைக்கப்பட்ட போலி இணையதளத்திற்கு அழைத்துச் செல்லும். அங்கே பொதுமக்கள் தங்களது வங்கி விவரங்கள் அல்லது டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு தகவல்களை உள்ளிடும்போது, அந்தத் தகவல்களைத் திருடும் மோசடி கும்பல், வங்கி கணக்கில் உள்ள மொத்தப் பணத்தையும் சில நிமிடங்களில் சுருட்டிவிடும் அபாயம் உள்ளது.
பாதுகாப்பு வழிமுறைகள்:
இந்த மோசடியில் இருந்து பொதுமக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள பின்வரும் நடைமுறைகளைப் பின்பற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்:
முன்-பின் தெரியாத எண்களில் இருந்து வரும் எஸ்.எம்.எஸ் அல்லது வாட்ஸ்அப் லிங்க்களை ஒருபோதும் கிளிக் செய்ய வேண்டாம்.
பார்சல் குறித்த தகவல்களை அறிய www.indiapost.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
வங்கி கணக்கு விவரங்கள், ஏடிஎம் பின் (PIN), ஓ.டி.பி (OTP) அல்லது கடவுச்சொற்களை (Password) யாருடனும் பகிரக் கூடாது.
புகார் அளிக்கும் எண்: ஏதேனும் சந்தேகத்திற்குரிய குறுஞ்செய்தி வந்தால், தாமதிக்காமல் உடனடியாக சைபர் குற்றப்பிரிவு உதவி எண் 1930 அல்லது www.cybercrime.gov.in என்ற இணையதள முகவரியில் புகார் அளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பட்டாசுக்கு முழுத் தடையா? – பசுமை பட்டாசு குறித்து அறிக்கை கேட்கிறது உச்ச நீதிமன்றம்!
வியாழன் 23, ஜூலை 2026 4:10:22 PM (IST)

வினாத்தாள் கசிவு: பிரதமர் மோடியின் அறிவிப்பை நிராகரித்த கரப்பான் பூச்சி ஜனதா கட்சி!
வியாழன் 23, ஜூலை 2026 11:54:40 AM (IST)

நாடாளுமன்றத்தில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் கருப்பு உடை அணிந்து போராட்டம்: திமுக புறக்கணிப்பு!
புதன் 22, ஜூலை 2026 12:16:45 PM (IST)

நீட் தேர்வு முறைகேடு, மாணவர்கள் மீது தடியடி: மோடி, அமித் ஷா பதவி விலக ராகுல் வலியுறுத்தல்!
செவ்வாய் 21, ஜூலை 2026 4:58:25 PM (IST)

ராமர் கோவில் நன்கொடை விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம்! - உச்ச நீதிமன்றம் கண்டிப்பு!
செவ்வாய் 21, ஜூலை 2026 12:35:16 PM (IST)

விரைவில் அறிமுகமாகிறது பிளாஸ்டிக் ரூபாய் நோட்டு: ஆர்பிஐ முதல்கட்டச் சோதனை முயற்சி!
செவ்வாய் 21, ஜூலை 2026 11:36:15 AM (IST)


