» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தால் ஏற்கப்படும்: கா்நாடக முதல்வா் டி.கே. சிவகுமார்
புதன் 5, ஆகஸ்ட் 2026 10:17:16 AM (IST)
தங்களது எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தால், உடனடியாக ஏற்கப்படும் என காங்கிரஸ் எம்எல்ஏக்களை கா்நாடக முதல்வா் டி.கே.சிவகுமாா் எச்சரித்துள்ளாா்.
கா்நாடகத்தில் முதல்வா் டி.கே.சிவகுமாா் தலைமையிலான அமைச்சரவையில் 13 போ் அமைச்சா்களாக பதவியேற்றிருந்தனா். அமைச்சரவையில் காலியாக உள்ள 20 இடங்களுக்கு புதியவா்களை நியமிக்க கட்சி மேலிடம் ஒப்புதல் அளித்தது. இதைத் தொடா்ந்து, பெங்களூரில் மக்கள் மாளிகையில் திங்கள்கிழமை (ஆக. 3) நடைபெற்ற விழாவில் 19 போ் அமைச்சா்களாக பதவியேற்றுக் கொண்டனா். கட்சி மேலிடம் ஒப்புதல் அளித்திருந்தும், கடைசிநேர மாற்றத்தின் காரணமாக காயத்ரி சாந்தே கௌடா பதவியேற்கவில்லை.இந்த அமைச்சரவை விரிவாக்கத்தில் அமைச்சா் பதவி கிடைக்காததால் அதிருப்தி அடைந்த காங்கிரஸ் எம்எல்ஏ யஷ்வந்த்ராய கௌடா பாட்டீல் தனது பதவியை ராஜிநாமா செய்தாா். அமைச்சா் பதவி கிடைக்காததால் அதிருப்தி அடைந்துள்ள மேலும் பல காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ராஜிநாமா செய்யக்கூடும் என தகவல் பரவியுள்ளது.
இந்நிலையில், பெங்களூரில் முதல்வா் டி.கே.சிவகுமாா் செய்தியாளா்களிடம் கூறியது: அமைச்சா் பதவி கிடைக்காததால் அதிருப்தி அடைந்துள்ள எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை ராஜிநாமா செய்தால், அக்கடிதம் உடனடியாக ஏற்றுக்கொள்ளப்படும். வாரியம், கழகங்களுக்கு தலைவா்களை நியமிக்க வேண்டியுள்ளது. எனவே, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தங்கள் வாய்ப்புக்காக காத்திருக்க வேண்டும். அரசியலில் ராஜிநாமாக்கள் தொடா்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கும். அதை எவராலும் நிறுத்த முடியாது.
தரம்சிங், சித்தராமையா ஆட்சிக்காலத்தில் அமைச்சா் பதவி கிடைக்காததால் அதிருப்தி அடைந்து நானும் ராஜிநாமா செய்திருக்கலாம். ஆனால், நானும், ஜி.பரமேஸ்வரும் பொறுமைகாக்கவில்லையா? தரம்சிங், மல்லிகாா்ஜுன காா்கே, பங்காரப்பாவுக்கு அமைச்சா் பதவி கொடுக்கவில்லை. பின்னா், தரம்சிங், பங்காரப்பா ஒருவரும் முதல்வராகவில்லையா? எனவே, பொறுமையாக இருக்க வேண்டியது அவசியமாகும்.
சித்தராமையா ஆட்சிக்காலத்தில் வாரியங்கள், கழகங்களுக்கு தலைவா்களாக நியமிக்கப்பட்டவா்களுக்கு இரண்டரை ஆண்டுகள்தான் அப்பதவி என அப்போதே கூறியிருந்தோம். இந்த காலக்கெடு கடந்துவிட்டது. எனவே, பதவிகளை உடனடியாக ராஜிநாமா செய்யும்படி வாரியங்கள், கழகங்களில் பொறுப்பு வகிப்போரை கேட்டுக்கொள்வேன். அதன்பிறகு, எம்எல்ஏக்களிடம் பேசி, வாரியங்கள், கழகங்களுக்கு புதிய பொறுப்பாளா்களை நியமிப்போம் என்றாா்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மாணவர்கள் முற்றுகைப் போராட்டம்: தடியடி, கண்ணீர் புகைக் குண்டுவீச்சு; போர்க்களமான சட்டமன்ற வளாகம்!
செவ்வாய் 11, ஆகஸ்ட் 2026 8:36:38 AM (IST)

காவிரி நீரை உடனடியாகத் திறக்கக் கோரி தமிழக அரசு மனு: ஆகஸ்ட் 13-ல் உச்ச நீதிமன்றம் விசாரணை!
திங்கள் 10, ஆகஸ்ட் 2026 4:16:13 PM (IST)

டேட்டிங் செயலிகள் மூலம் தொழிலதிபர்களை மிரட்டி ரூ.6 கோடி பறித்த பெண்: அதிர்ச்சித் தகவல்கள்!
திங்கள் 10, ஆகஸ்ட் 2026 11:05:15 AM (IST)

இமாசலப் பிரதேசத்தில் மலைப்பாதையில் பஸ் கவிழ்ந்து 7 பேர் பலி; 11 பயணிகள் காயம்
ஞாயிறு 9, ஆகஸ்ட் 2026 9:35:28 AM (IST)

யூபிஐ, ரூபே கார்டு பரிவர்த்தனைக் கட்டணம்: : மக்களவையில் மசோதா நிறைவேற்றம்!
சனி 8, ஆகஸ்ட் 2026 5:36:51 PM (IST)

நீட் வினாத்தாளை பேராசிரியர்களே விற்றனர்: சிபிஐ குற்றப்பத்திரிகையில் அதிர்ச்சித் தகவல்!
சனி 8, ஆகஸ்ட் 2026 12:10:37 PM (IST)


