» செய்திகள் - விளையாட்டு » உலகம்
சிறுமிகள் பாலியல் குற்றவாளிக்கு பொது மன்னிப்பு: ஹங்கேரி அதிபர் ராஜினாமா
திங்கள் 12, பிப்ரவரி 2024 8:13:47 AM (IST)
ஹங்கேரியில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றவாளிக்கு பொது மன்னிப்பு வழங்கியதற்காக அதிபர் கடாலின் நோவக் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
ஐரோப்பிய நாடான ஹங்கேரியின் முதல் பெண் அதிபர் கடாலின் நோவக் (46). கடந்த 2022-ல் இவர் அதிபராக பொறுப்பேற்றார். இதற்கிடையே அங்கு அரசு குழந்தைகள் காப்பக நிர்வாகி ஒருவர் கடந்த 2004 முதல் 2016 வரை ஏராளமான சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பான வழக்கில் அவர் மீதான குற்றச்சாட்டு உறுதியானதால் 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பளித்தது.ஆனால் அந்த நபருக்கு அதிபர் கடாலின் நோவக் தனது அதிகாரத்தை பயன்படுத்தி பொது மன்னிப்பு வழங்கினார். இதற்கு அப்போதைய சட்டத்துறை மந்திரியாக இருந்த ஜூடிட் வர்காவும் அனுமதி அளித்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து அதிபர் பதவி விலக வேண்டும் என பொதுமக்கள் போராட்டத்தில் குதித்தனர்.
இந்தநிலையில் அதிபர் கடாலின் நோவக் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். இதுகுறித்து அரசு தொலைக்காட்சியில் அவர் பேசுகையில் `கருணையின் அடிப்படையிலும், அந்த நபர் குற்றத்தை செய்யவில்லை என தான் நம்பியதாலும் பொது மன்னிப்பு வழங்கினேன். ஆனால் நான் தவறு இழைத்து விட்டேன். அதற்கு பொறுப்பேற்று பதவி விலகுகிறேன். மேலும் நாட்டு மக்கள் அனைவரிடமும் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்' என கூறினார்.
இதனைதொடர்ந்து அப்போது சட்டத்துறை மந்திரியாக இருந்த ஜூடிட் வர்காவும் தனது அரசியல் வாழ்க்கையில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இவர் தற்போது ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் தலைவருக்கான பட்டியலில் உள்ளார். இது ஹங்கேரி நாட்டு அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பொம்மைகளை போல ஆப்கனிஸ்தானை இந்தியா இயக்குகிறது : பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர்
செவ்வாய் 4, நவம்பர் 2025 12:03:35 PM (IST)

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை : தம்பியின் இளவரசர் பட்டத்தை பறித்த மன்னர் சார்லஸ்!
சனி 1, நவம்பர் 2025 11:23:39 AM (IST)

அமெரிக்காவும் சீனாவும் நண்பர்களாக இருக்க வேண்டும்: சீன அதிபர் ஜின்பிங்
வியாழன் 30, அக்டோபர் 2025 12:16:06 PM (IST)

அமீரக லாட்டரியில் இந்தியருக்கு ரூ.250 கோடி பரிசு
புதன் 29, அக்டோபர் 2025 4:46:14 PM (IST)

உக்ரைனில் அணுமின் நிலையம் அருகே நீல நிற நாய்கள்: சமூக ஊடகங்களில் வைரல்!
புதன் 29, அக்டோபர் 2025 12:35:18 PM (IST)

வெளிநாட்டினர், கிரீன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு புதிய நடைமுறை : அமெரிக்கா அறிவிப்பு
செவ்வாய் 28, அக்டோபர் 2025 5:00:36 PM (IST)




