» செய்திகள் - விளையாட்டு » உலகம்
கச்சத்தீவு குறித்து இந்தியா கோரிக்கை எதுவும் வைக்கவில்லை: இலங்கை அமைச்சர்
செவ்வாய் 2, ஏப்ரல் 2024 11:02:38 AM (IST)
கச்சத்தீவை திரும்ப ஒப்படைக்கும்படி இந்திய அரசு இதுவரை, எந்த கோரிக்கையும் வைக்கவில்லை என்று இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டமான் கூறியுள்ளார்.

இதற்கு எதிர்வினையாற்றியுள்ள தி.மு.க., 10 ஆண்டுகாலமாக இதுகுறித்து பேசாமல் தேர்தல் நேரத்தில் பா.ஜ.க. பேசி வருவது ஏன் என கேள்வியெழுப்பியுள்ளது. இந்த சூழலில், கச்சத்தீவு விவகாரம் குறித்து இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டமான் பிரபல நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது;
"இலங்கையை பொறுத்தவரையில் கச்சத்தீவு இலங்கையின் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. இந்தியா- இலங்கை உடனான வெளியுறவுக் கொள்கை ஆரோக்கியமாக உள்ளது. கச்சத்தீவை திரும்ப ஒப்படைக்கும்படி இந்திய அரசு இதுவரை, எங்களிடம் எந்த கோரிக்கையும் வைக்கவில்லை. அவ்வாறு இந்திய அரசிடமிருந்து கோரிக்கை ஏதும் இருந்தால், இலங்கை வெளியுறவுத்துறை அதற்கு பதிலளிக்கும்." என்றார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதை நிறுத்துவதாக மோடி உறுதி கூறினார்: டிரம்ப் பேட்டி!
வியாழன் 16, அக்டோபர் 2025 3:31:02 PM (IST)

சீன அரசு அதிகாரிகளுடன் ரகசிய தொடர்பு : இந்திய வம்சாவளி ஆலோசகர் அமெரிக்காவில் கைது
புதன் 15, அக்டோபர் 2025 11:48:01 AM (IST)

மாஸ்கோ வரை பாயும் ஏவுகணைகளை உக்ரைனுக்கு வழங்குவேன்: ரஷியாவுக்கு டிரம்ப் மிரட்டல்!
செவ்வாய் 14, அக்டோபர் 2025 10:28:15 AM (IST)

2025ஆம் ஆண்டு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு 3 பேருக்கு பகிர்ந்தளிப்பு
திங்கள் 13, அக்டோபர் 2025 5:21:39 PM (IST)

வர்த்தக போரை விரும்பவில்லை; அமெரிக்காவின் மிரட்டலுக்கு பயப்பட மாட்டோம் - சீனா உறுதி
திங்கள் 13, அக்டோபர் 2025 12:02:17 PM (IST)

ராஜினாமா செய்த 4 நாட்களில் பிரான்ஸ் பிரதமராக செபாஸ்டியன் மீண்டும் நியமனம்
ஞாயிறு 12, அக்டோபர் 2025 11:24:27 AM (IST)
