» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ரத்தக்கறை படிந்த குற்றவாளியுடன் கை குலுக்கிய பிரதமர் மோடி : உக்ரைன் அதிருப்தி!

செவ்வாய் 9, ஜூலை 2024 5:27:45 PM (IST)

ரத்தக்கறை படிந்த குற்றவாளியை இந்திய பிரதமர் கட்டிப்பிடிப்பது மிகப்பெரிய ஏமாற்றத்தை அளிக்கிறது என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.

பிரதமர் மோடி, அரசு முறை பயணமாக ரஷ்யா சென்றுள்ளார். மாஸ்கோ புறநகரில் , அந்நாட்டு அதிபர் புடினை சந்தித்து பேசினார். மோடியை கட்டியணைத்து வரவேற்று புடின் அழைத்துச் சென்றார்.

இது தொடர்பாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வெளியிட்ட ‛எக்ஸ் ' சமூக வலைதளப்பதிவில் கூறியுள்ளதாவது: உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தின் தலைவர், உலகின் ரத்தக்கறை படிந்த குற்றவாளியை கட்டிப்பிடிப்பதை பார்ப்பது மிகப்பெரிய ஏமாற்றம் அளிக்கிறது. அமைதி முயற்சிகளுக்கு பேரழிவு தரும் அடியாகும். இவ்வாறு அந்தப் பதிவில் கூறியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsTirunelveli Business Directory