» செய்திகள் - விளையாட்டு » உலகம்
ஹமாஸ் தலைவர் படுகொலை: இஸ்ரேல் மீது நேரடி தாக்குதல் நடத்த ஈரான் உத்தரவு
வெள்ளி 2, ஆகஸ்ட் 2024 12:54:53 PM (IST)

ஹமாஸ் அமைப்பின் தலைவர் படுகொலை செய்யப்பட்டதால் இஸ்ரேல் மீது நேரடி தாக்குதலில் ஈடுபட ஈரான் உத்தரவிட்டுள்ளது.
இஸ்ரேலுக்குள் கடந்த அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் அமைப்பினர் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 250 பேர் பணய கைதிகளாக கடத்திச் செல்லப்பட்டனர்.
இதனையடுத்து காசா மீது இஸ்ரேல் போர் தொடுத்தது. கடந்த 10 மாதங்களுக்கும் மேலாக நடைபெற்று வரும் இந்த போரில் இதுவரை 39 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் பலியாகி உள்ளனர். எனவே போரை நிறுத்தும்படி உலக நாடுகள் பலவும் இஸ்ரேைல வலியுறுத்துகின்றன.
ஆனால் ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் அழிக்கும்வரை இந்த தாக்குதல் தொடரும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாகு கூறியுள்ளார். அதன்படி ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவாக உள்ள ஏமன், லெபனான் உள்ளிட்ட நாடுகளிலும் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே ஈரான் நாட்டின் புதிய அதிபர் மசூத் பெஜஷ்கியானின் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஹமாஸ் அமைப்பின் தலைவர் இஸ்மாயில் ஹனியேவும் (வயது 62) கலந்து கொண்டார். பின்னர் நாட்டின் உச்ச தலைவர் அயோதுல்லா அலி கமேனியை சந்தித்து பேசிய அவர் தலைநகர் டெஹ்ரானில் உள்ள ஒரு வீட்டில் தங்கி இருந்தார்.
அப்போது இஸ்மாயில் ஹனியே மற்றும் அவரது உதவியாளர் படுகொலை செய்யப்பட்டனர். இதற்கு இஸ்ரேல்தான் காரணம் என ஹமாஸ் அமைப்பு குற்றம்சாட்டுகிறது. தனது நாட்டில் வைத்து இந்த சம்பவம் அரங்கேறியதால் ஈரானின் கோபத்தை தூண்டியது.
இதனையடுத்து இஸ்ரேல் மீது நேரடி தாக்குதலை நடத்த நாட்டின் உச்ச தலைவர் அயோதுல்லா அலி கமேனி ராணுவத்துக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும் ஈரான் மீது இஸ்ரேலோ, அமெரிக்காவோ தாக்குதல் நடத்தினால் போரை விரிவுபடுத்தவும் திட்டமிடப்பட்டு உள்ளது.
இதற்காக ஏமன், சிரியா மற்றும் ஈராக் ஆகிய நாடுகளுடன் இணைந்து தாக்குதல் நடத்துவது குறித்தும் பரிசீலித்து வருவதாக அவர் கூறினார். இதனால் அங்கு கடுமையான போர்ப்பதற்றம் நிலவுகிறது. இதற்கிடையே இஸ்மாயில் ஹனியேவின் இறுதி ஊர்வலம் நேற்று தலைநகர் டெஹ்ரானில் நடந்தது. இதில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.
மக்கள் கருத்து
ஏய் சந்திரன் என்ற தொந்திரன்Aug 4, 2024 - 09:39:15 PM | Posted IP 162.1*****
நீ வரலாறு தெரியாமல் பேசவேண்டாம்.
சந்திரன்Aug 3, 2024 - 01:50:49 PM | Posted IP 162.1*****
எவ்வளவு தைரியம் இருந்தால் அடுத்த நாட்டிற்குள் புகுந்து தாக்குதல் நடத்துவது ஏற்றுக்கொள்ள முடியாது ஆதலால் இஸ்ரேல் அழிக்கப்பட வேண்டிய ஒரு நாடு
அதுAug 2, 2024 - 09:34:11 PM | Posted IP 162.1*****
தீவிரவாத தலைவன். மதவெறி பிடித்த திருந்தாத முட்டா மக்கள். போரை ஆரம்பித்தவர்கள் எல்லாம் மதவெறி பிடித்த முட்டா தீவிரவாத அரசியல்வாதிகள்.
மேலும் தொடரும் செய்திகள்

ஆப்கானிஸ்தான் எல்லையில் பாகிஸ்தான் வான்வழி தாக்குதல்: 3 கிரிக்கெட் வீரர்கள் உள்பட 8 பேர் பலி
சனி 18, அக்டோபர் 2025 10:46:45 AM (IST)

ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதை நிறுத்துவதாக மோடி உறுதி கூறினார்: டிரம்ப் பேட்டி!
வியாழன் 16, அக்டோபர் 2025 3:31:02 PM (IST)

சீன அரசு அதிகாரிகளுடன் ரகசிய தொடர்பு : இந்திய வம்சாவளி ஆலோசகர் அமெரிக்காவில் கைது
புதன் 15, அக்டோபர் 2025 11:48:01 AM (IST)

மாஸ்கோ வரை பாயும் ஏவுகணைகளை உக்ரைனுக்கு வழங்குவேன்: ரஷியாவுக்கு டிரம்ப் மிரட்டல்!
செவ்வாய் 14, அக்டோபர் 2025 10:28:15 AM (IST)

2025ஆம் ஆண்டு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு 3 பேருக்கு பகிர்ந்தளிப்பு
திங்கள் 13, அக்டோபர் 2025 5:21:39 PM (IST)

வர்த்தக போரை விரும்பவில்லை; அமெரிக்காவின் மிரட்டலுக்கு பயப்பட மாட்டோம் - சீனா உறுதி
திங்கள் 13, அக்டோபர் 2025 12:02:17 PM (IST)

சந்திரன் என்ற துலுக்க பய அவருக்குAug 4, 2024 - 09:46:34 PM | Posted IP 162.1*****