» செய்திகள் - விளையாட்டு » உலகம்

அமெரிக்கர்கள் குறைவான தீமையை தேர்வு செய்ய வேண்டும் : போப் பிரான்சிஸ் கருத்து!

சனி 14, செப்டம்பர் 2024 4:32:31 PM (IST)

"அமெரிக்கர்கள் தங்கள் மனசாட்சியை ஆராய்ந்து வாக்களிக்க வேண்டும். இரண்டு தீமைகளில் குறைவானவர் யார்? என்பது எனக்கு தெரியாது" என்று போப் பிரான்சிஸ் கூறியுள்ளார். 

அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் அனல் பறக்கும் பிரசாரம் நடைபெற்று வருகிறது. அமெரிக்க அதிபர் தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது தொடர்பாக போப் பிரான்சிஸ் செய்தியாளர்கள் கேட்டனர். 

இதற்கு பதிலளித்த போப் பிரான்சிஸ் கூறியதாவது: அமெரிக்கர்கள் குறைவான தீமையை தேர்வு செய்ய வேண்டும். இரண்டு தீமைகளில் குறைவானவர் யார்? அந்த பெண்மணி அல்லது ஜென்டில்மேன் எனக்கு தெரியாது. அமெரிக்கர்கள் தங்கள் மனசாட்சியை ஆராய்ந்து வாக்களிக்க செல்வதற்கு முன் அந்த முடிவை எடுக்க வேண்டும் வாக்களிக்காதது நல்லது அல்ல. கருக்கலைப்பு ஒரு மனிதனைக் கொல்கிறது. கருக்கலைப்புக்கு எந்த காரணமும் இருக்க முடியாது . இது ஒரு படுகொலை இந்த விஷயங்களைப் பற்றி நாம் தெளிவாகப் பேச வேண்டும்" என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory