» செய்திகள் - விளையாட்டு » உலகம்

பிரபஞ்ச அழகி போட்டியில் டென்மார்க்கின் விக்டோரியா கெயர் பட்டம் வென்றார்!

திங்கள் 18, நவம்பர் 2024 5:52:18 PM (IST)



மெக்சிகோவில் நடந்த 73வது பிரபஞ்ச அழகி போட்டியில் டென்மார்க்கின் விக்டோரியா கெயர் தெல்விக் மகுடத்தை வென்றார். 

மெக்சிகோவில் நடந்த 73வது பிரபஞ்ச அழகி போட்டியில் இந்தியாவின் ரியா சிங்கா உட்பட உலகம் முழுவதிலும் இருந்து 125 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். ஆரம்பம் முதலே கவனம் ஈர்த்த டென்மார்க் அழகி விக்டோரியா கெயர் தெல்விக், இறுதிச்சுற்றில் நடுவர்களின் கேள்விக்கு, "நீங்கள் எங்கிருந்து வந்தாலும், உங்கள் கடந்த காலம் எதுவாக இருந்தாலும், அதை உங்கள் பலமாக மாற்ற நீங்கள் எப்போதும் தேர்வு செய்யலாம்" என்று பதிலளித்தார். இந்த பதிலால் கவரப்பட்ட நடுவர்கள் 2024 உலக அழகியாக விக்டோரியா கெயர் தெல்விக்கை அறிவித்தனர்.

இவரே டென்மார்க்கிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் உலக அழகியாவார். புதிய வரலாற்று சாதனை படைத்த விக்டோரியா தொழில்முனைவராகவும் இருக்கிறார். இரண்டாவது இடம் நைஜீரியாவை சேர்ந்த சிடிம்மா அடெட்ஷினாவுக்கும் மூன்றாவது இடம் மெக்சிகோவை சேர்ந்த மரியா பெர்னாண்டாவுக்கும் கிடைத்துள்ளது.

முன்னதாக இந்தியாவை சேர்ந்த ரியா சிங்கா முதல் 12 இடங்களை பிடிக்கத் தவறியதால், பிரபஞ்ச அழகி 2024 போட்டிக்கான இந்தியாவின் நம்பிக்கை பொய்த்து போனது. அவர் முதல் 30 இடங்களை எட்டிய போதிலும், ஆரம்ப சுற்றுகளில் அசத்திய ரியா சிங்கா, ரசிகர்களுக்கு பெரும் நம்பிக்கை அளித்தார். ஆனால் அவரால் இறுதிச் சுற்றுக்கு செல்ல முடியவில்லை.


மக்கள் கருத்து

naan thaanNov 25, 2024 - 12:33:47 PM | Posted IP 162.1*****

என்ன பிரபஞ்ச பேரழகி என் ex அளவுக்கு இல்லையே

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory