» செய்திகள் - விளையாட்டு » உலகம்

இஸ்ரேல்- ஈரான் போர் பதற்றம் எதிரொலி : கச்சா எண்ணெய் விலை உயர்கிறது!

புதன் 2, அக்டோபர் 2024 5:06:10 PM (IST)



இஸ்ரேல்- ஈரான் போர் பதற்றம் காரணமாக கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருகிறது.

இஸ்ரேல் மீது ஈரான் 400க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி நேற்று இரவு தாக்குதல் நடத்தியது. ஹிஸ்புல்லா தலைவர் நஸ்ரல்லா மரணத்திற்கு பழிவாங்கவே இந்த தாக்குதலை துவங்கியதாக ஈரான் அறிவித்துள்ளது. இதற்கு பதில் அளித்து, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியருப்பதாவது:

ஈரான் பெரும் தவறை செய்து விட்டது. தவறுக்கான விலையை ஈரான் கொடுத்தே ஆக வேண்டும். இஸ்ரேலின் வான் பாதுகாப்பு சிறப்பாக இருந்ததால், ஈரான் முயற்சி தோல்வி அடைந்தது. இவ்வாறு பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்தார்.

இது குறித்து, சமூகவலைதளத்தில் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், இஸ்ரேல் மீதான ஈரானின் ஏவுகணைத் தாக்குதலை ஆஸ்திரேலியா கண்டிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா துணை அதிபர் கமலா ஹாரிஸ் கூறியதாவது: மத்திய கிழக்கு நாடுகளை ஈரான் சீர்குலைக்கிறது. இஸ்ரேலுக்கு எதிரான நடவடிக்கைகளை அமெரிக்கா வேடிக்கை பார்க்காது என்றார்.

இஸ்ரேலில் இந்திய மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். இஸ்ரேல் அரசு சொல்லும் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றுங்கள். 24 மணி நேர உதவி எண்களை 972-547520711, 972-543278392 தொடர்பு கொள்ளலாம் என இந்திய தூதரகம் அறிவித்தது. இஸ்ரேல் ஈரான் இடையிலான போர் பதற்றம் காரணமாக, கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருகிறது.

ஈரான் ஏவுகணை தாக்குதலை துவக்கிய உடனேயே மேற்கத்திய நாடுகளின் எண்ணை சந்தைகளில் கச்சா எண்ணெய் விலை மூன்று சதவீதம் அதிகரித்துள்ளது. வரும் நாட்களில் விலை மேலும் அதிகரிக்கவே வாய்ப்பு அதிகம் என தகவல்கள் வெளியாகின்றன.


மக்கள் கருத்து

சந்திரன் என்கிற தொந்திரன் அவர்களுக்குOct 4, 2024 - 09:19:13 AM | Posted IP 162.1*****

இஸ்ரேல் ஒரு கடவுளின் தேசம், அரபு நாடுகள் இஸ்ரேல் விட 100 மடங்கு பெரிய நாடாக இருந்தாலும் ஒரு குட்டி இஸ்ரேல் நாட்டை யாராலும் அழிக்க முடியாது, கைப்பற்ற முடியாது இஸ்ரயேலை தாக்கினால் அதன் விளைவு பல மடங்கு இருக்கும்.

சந்திரன்Oct 3, 2024 - 04:15:51 PM | Posted IP 162.1*****

இஸ்ரேல் அழிவை நோக்கி செல்ல துவங்கி விட்டது

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory