» செய்திகள் - விளையாட்டு » உலகம்
ஹமாஸ் ஆயுதக்குழு மீது கடும் தாக்குதல் : நடத்தப்படும் டிரம்ப் எச்சரிக்கை!
செவ்வாய் 3, டிசம்பர் 2024 11:41:41 AM (IST)
பணய கைதிகளை விடுதலை செய்யவில்லை என்றால் ஹமாஸ் ஆயுதக்குழு மீது கடுமையான தாக்குதல் நடத்தப்படும் என்று டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதையடுத்து ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் 117 பணய கைதிகளை உயிருடன் மீட்டுள்ளது. அதேபோல், ஹமாஸ் ஆயுதக்குழுவினர்களால் கடத்தப்பட்டு கொல்லப்பட்ட பணய கைதிகளின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளன. ஆனால், ஹமாஸ் வசம் இன்னும் 101 பேர் பணய கைதிகளாக உள்ளனர் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
பணய கைதிகளாக உள்ளவர்களில் அமெரிக்காவை சேர்ந்தவர்களும் அடக்கம். பணய கைதிகளில் பலர் உயிரிழந்திருக்கலாம் எனவும் தகவல் வெளியானது. அதேவேளை, தங்கள் வசம் உள்ள பணய கைதிகளில் 33 பேர் கொல்லப்பட்டுவிட்டதாக ஹமாஸ் ஆயுதக்குழு தற்போது தெரிவித்துள்ளது.
இதனிடையே, இந்த போரில் காசாவில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உள்பட 44 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அதேபோல், மேற்குகரையில் ஏற்பட்ட மோதலில் 700க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
ஹமாஸ் வசம் உள்ள பணய கைதிகளை மீட்க இஸ்ரேல் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. பணய கைதிகளை விடுதலை செய்ய வேண்டுமானால் காசாவில் போரை நிறுத்த வேண்டுமென இஸ்ரேலுக்கு ஹமாஸ் ஆயுதக்குழு நிபந்தனை விதித்துள்ளது. ஆனால், ஹமாஸ் ஆயுதக்குழுவை முழுமையாக அழித்து, பணய கைதிகளை மீட்கும்வரை போரை நிறுத்தப்போவதில்லை என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், பணய கைதிகளை விடுதலை செய்யவில்லையென்றால் நரக விலை கொடுக்க நேரிடும் என்று ஹமாசுக்கு டொனால்டு டிரம்ப் கெடு விதித்துளார். தேர்தலில் வெற்றிபெற்ற டொனால்டு டிரம்ப் அமெரிக்க அதிபராக ஜனவரி 20ம் தேதி பதவியேற்க உள்ளார்.
அதிபராக தான் பதவியேற்கும் தினத்திற்கு முன்பு பணய கைதிகளை ஹமாஸ் ஆயுதக்குழு விடுதலை செய்யவேண்டும், அவ்வாறு பணய கைதிகளை விடுதலை செய்யாவிட்டால் மத்திய கிழக்கில் ஹமாஸ் நரக விலை கொடுக்க நேரிடும் என்று டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
'நான் அதிபராக பதவியேற்க உள்ள ஜனவரி 20ம் தேதிக்கு முன்பு பணய கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும். அதிபராக பதவியேற்ற பின்னர் பணய கைதிகள் விடுதலை செய்யப்படவில்லை என்றால் அதற்கு காரணமானவர்கள் (ஹமாஸ் ஆயுதக்குழு) மீது அமெரிக்க வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு கடுமையான தாக்குதல் நடத்தப்படும்' என்று டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இந்திய அரசு முயற்சி: கேரள நர்ஸ் நிமிஷா பிரியாவின் மரண தண்டனையை ஒத்திவைத்தது ஏமன்!
செவ்வாய் 15, ஜூலை 2025 5:04:27 PM (IST)

சீன அதிபர் ஜி ஜின்பிங் உடன் வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் சந்திப்பு
செவ்வாய் 15, ஜூலை 2025 4:08:45 PM (IST)

பாகிஸ்தானின் அணுசக்தி திட்டத்தின் நோக்கம் அமைதியை நோக்கியது : ஷெபாஸ் ஷெரீப்
ஞாயிறு 13, ஜூலை 2025 6:51:16 PM (IST)

நெட்பிளிக்ஸ் மொத்த படமும் நொடியில் டவுன்லோடு : இணைய வேகத்தில் ஜப்பான் உலக சாதனை!!
சனி 12, ஜூலை 2025 5:32:49 PM (IST)

நாசாவில் செலவினங்களை குறைக்க 2ஆயிரம் ஊழியர்கள் பணிநீக்கம்? டிரம்ப் அதிரடி முடிவு!
வெள்ளி 11, ஜூலை 2025 10:30:06 AM (IST)

நிதி நிறுவனத்தின் ஆலோசகராக மீண்டும் பணிக்கு திரும்பினார் முன்னாள் பிரதமர் ரிஷி சுனக்!
புதன் 9, ஜூலை 2025 4:33:30 PM (IST)
