» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ஜப்பானில் 2ம் உலகப் போரில் புதைக்கப்பட்ட வெடிகுண்டு வெடித்தது

வியாழன் 3, அக்டோபர் 2024 12:29:37 PM (IST)



ஜப்பானில், இரண்டாம் உலகப் போரின் போது புதைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு நேற்று திடீரென வெடித்ததில், விமான நிலைய ஓடுபாதையில் சேதம் அடைந்தது. 

கிழக்கு ஆசிய நாடான ஜப்பானில், தென் மேற்கு பகுதியில் மியாசாகி விமான நிலையம் உள்ளது. 1943ல், இரண்டாம் உலகப் போரின் போது, ஜப்பான் கடற்படை தளமாக இந்த விமான நிலையம் திறக்கப்பட்டது. இரண்டாம் உலகப் போரின் போது வீசப்பட்ட நுாற்றுக்கணக்கான டன் வெடிகுண்டுகள், ஜப்பானை சுற்றி புதைந்து கிடக்கின்றன. சில சமயங்களில், கட்டுமானப் பணிகளின் போது வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்படுகின்றன.

அமெரிக்க ராணுவம் வீசிய வெடிக்காத குண்டுகள், மியாசாகி விமான நிலையம் அமைந்துள்ள பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில், மியாசாகி விமான நிலையத்தில் புதைக்கப்பட்டிருந்த இரண்டாம் உலகப் போரின் போது வெடிக்காத அமெரிக்க வெடிகுண்டு நேற்று திடீரென வெடித்ததில், ஓடுபாதையில் பள்ளம் ஏற்பட்டது.

இது குறித்து விமான நிலைய அதிகாரிகள் கூறுகையில், '500 பவுண்டுகள் எடையுள்ள அமெரிக்க வெடிகுண்டு திடீரென வெடித்தது. இதனால், ஓடுபாதையில் பள்ளம் ஏற்பட்டது. 'வெடிகுண்டு வெடித்த போது அருகில் எந்த விமானங்களும் இல்லை. மேலும், யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. 'இந்த சம்பவத்தால், 80க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன' என்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory