» செய்திகள் - விளையாட்டு » உலகம்

பாகிஸ்தானில் விமான நிலையம் அருகே குண்டுவெடிப்பு : சீன பொறியாளர்கள் பலி

செவ்வாய் 8, அக்டோபர் 2024 11:37:05 AM (IST)



பாகிஸ்தானில் விமான நிலையம் அருகே கார் குண்டு வெடித்ததில் சீன பொறியாளர்கள் பலியாகினர்.

பாகிஸ்தான்-சீனா பொருளாதார வழித்தட திட்டத்தின் கீழ் சுமார் ரூ.5 லட்சம் கோடி மதிப்பிலான பணிகள் பாகிஸ்தானில் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த திட்டத்தின் கீழ் ஆயிரக்கணக்கான சீன தொழிலாளர்கள் அங்கு பணிபுரிகின்றனர்.

அதேசமயம் அங்குள்ள சீன தொழிலாளர்களை குறிவைத்து அவ்வப்போது தாக்குதல் சம்பவங்களும் அரங்கேறுகின்றன. இந்த நிலையில் சீனாவைச் சேர்ந்த பொறியாளர்களை ஏற்றிக்கொண்டு சிந்து மாகாணத்தில் ஒரு கார் சென்றது. கராச்சியில் உள்ள ஜின்னா விமான நிலையம் அருகே சென்றபோது அந்த கார் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.

இதில் சீன பொறியாளர்கள் உள்பட 3 பேர் உடல் சிதறி பலியாகினர். மேலும் 17 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. மீட்பு படையினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். மேலும் விமான நிலையம் அருகே நிறுத்தப்பட்டு இருந்த பல வாகனங்களும் கடுமையாக சேதமடைந்தன. விமான நிலையம் அருகே நடைபெற்ற இந்த தாக்குதல் சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. எனவே விமான நிலையம் அருகே சிறிது நேரம் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

சீனா கண்டனம்

இந்த தாக்குதலுக்கு பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்று உள்ளது. இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், பலுசிஸ்தான் விடுதலை ராணுவ அமைப்பைச் சேர்ந்த ஒருவர் சீனர்கள் சென்ற காரை குறிவைத்து தனது வாகனத்தை மோதி பின்னர் தனது உடலில் பொருத்தப்பட்டு இருந்த குண்டை வெடிக்கச் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த தாக்குதல் சம்பவத்துக்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் சீனா வலியுறுத்தியது.

இதனையடுத்து கிழக்கு பஞ்சாப் மாகாணம் மியான்வாலி பகுதியில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் ராணுவ வீரர்கள் அங்கு விரைந்து சென்றனர். அப்போது ராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 7 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். மேலும் தப்பி ஓடிய பயங்கரவாதிகளை ராணுவத்தினர் வலைவீசி தேடி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory