» செய்திகள் - விளையாட்டு » உலகம்

கமலா ஹாரிஸ் பிரசாரத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு?

சனி 12, அக்டோபர் 2024 12:30:27 PM (IST)



அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் பிரசாரத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு நடந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. 

அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் மாதம் நடைபெற உள்ளது. இதில் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய துணை அதிபரும், இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். அவர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இந்த நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளராக கமலா ஹாரிஸ் தேர்வு செய்யப்பட்டதைக் கொண்டாடும் விழாவில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் நேரடி இசை நிகழ்ச்சி நடத்துகிறார் என்று ஆசிய, அமெரிக்க, பசிபிக் தீவுவாசிகளின் வெற்றி நிதியம் அமைப்பு அறிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பு கூறும்போது, அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளராக கமலா ஹாரிஸ் அறிவிக்கப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க தருணத்தை ஏ.ஆர். ரகுமானுடன், உலகத் தரம் வாய்ந்த நேரடி இசை நிகழ்ச்சியுடன் இணைந்து கொண்டாட உள்ளோம் என்று தெரிவித்துள்ளது.

நிகழ்ச்சிக்கான தேதி குறித்த அறிவிப்பு வெளியிடப்படவில்லை. அதே போல் ஏ.ஆர்.ரகுமான் தரப்பிலும் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. இதற்கிடையே கமலா ஹாரிசுக்கு ஆதரவாக 30 நிமிட நிகழ்ச்சி வீடியோவை ஏ.ஆர்.ரகுமான் பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory