» செய்திகள் - விளையாட்டு » உலகம்

உக்ரைன் போருக்கு அமைதி வழியில் முடிவு: ரஷ்யா அதிபர் புடின் விருப்பம்!

சனி 19, அக்டோபர் 2024 10:46:36 AM (IST)

உக்ரைன் உடனான போரை அமைதியான வழிகளில் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என ரஷ்யா அதிபர் புடின் தெரிவித்தார்.

சமீபத்தில் உக்ரைன் தலைநகர் கீவ் சென்ற பிரதமர் மோடி, உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியை சந்தித்துப் பேசினார். அப்போது அவர் ரஷ்யா உடன் நடந்து வரும் போருக்கு அமைதியான முறையில் தீர்வு காண்பதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார். இந்நிலையில், ரஷ்யாவில் அக்டோபர் 22,23ம் தேதிகளில் பிரிக்ஸ் மாநாடு நடைபெற உள்ளது. இதுவரை மொத்தம் 15 பிரிக்ஸ் மாநாடுகள் நடந்துள்ளன.

புடின் அழைப்பின் பேரில் , பிரதமர் மோடி அக்டோபர் 23ம் தேதி பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க ரஷ்யா செல்கிறார். இது குறித்து மாஸ்கோவில் செய்தியாளர்கள் சந்திப்பில் புடின் கூறியதாவது: மோதலை தீர்ப்பதில் ரஷ்யா ஆர்வமாக உள்ளது. உக்ரைன் உடனான போர் குறித்து தொடர்ந்து கவலைகள் தெரிவித்து வரும் பிரதமர் மோடிக்கு நன்றி.

பிரதமர் மோடியுடன் பேசும் போது, ஒவ்வொரு முறையும் போரை முடிவுக்கு கொண்டு வரும்படி, தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்துகிறார். உக்ரைன் உடனான போரை அமைதியான வழிகளில் முடிவுக்கு கொண்டு வர வேண்டும். நாங்கள் அல்ல, ஆனால் உக்ரைன் தரப்புதான் அதை செய்ய வேண்டும். பிரிக்ஸ் அமைப்பு யாருக்கும் எதிரானது அல்ல. ரஷ்யா, அமெரிக்கா இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணம் அமெரிக்கா தான். இவ்வாறு புடின் கூறினார்.


மக்கள் கருத்து

தேசபக்தன்Oct 19, 2024 - 09:55:14 PM | Posted IP 172.7*****

மோடி டா

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory