» செய்திகள் - விளையாட்டு » உலகம்

உக்ரைனுக்கு ஏவுகணை வழங்கும் மேற்கத்திய நாடுகள் மீது தாக்குதல் : புதின் எச்சரிக்கை!

வெள்ளி 22, நவம்பர் 2024 11:50:03 AM (IST)

ரஷியா மீது தாக்குதல் நடத்த உக்ரைனுக்கு ஏவுகணை வழங்கும் நாடுகள் மீதும் தாக்குதல் நடத்தப்படும் என்று ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ரஷியா - உக்ரைன் இடையேயான போர் 1,000 நாள்களை கடந்துள்ள நிலையில், தங்களுடன் இணைந்து போரிடுவதற்காக ஆயிரக்கணக்கான வட கொரிய ராணுவ சிறப்புப் படையினரை ரஷியா வரவழைத்துள்ளது.

இதற்குப் பதிலடியாக, போரில் உக்ரைன் எல்லைக்குள் உள்ள ரஷிய நிலைகள் மீது தாக்குதல் நடத்துவதற்காக மட்டுமே தாங்கள் வழங்கியிருந்த அதிநவீன ‘அட்டாக்கம்ஸ்’ ஏவுகணைகளை, ரஷிய பகுதிகள் மீதும் வீசலாம் என்று அமெரிக்கா அனுமதி அளித்தது.

அதன் எதிா்வினையாக, அணு ஆயுத பலம் பொருந்திய நாடுடன் தங்கள் மீது தாக்குதல் நடத்தும் அணு ஆயுத பலமற்ற நாட்டின் மீதும் அணு குண்டுகளை வீசுவதற்கு வகை செய்யும் வகையில் தனது அணு ஆயுதக் கொள்கையில் ரஷியா மாற்றம் கொண்டுவந்தது.

இதனிடையே, மேற்கத்திய நாடுகளை எச்சரிக்கும் விதமாக, பல ஆயிரம் கி.மீ. தொலைவு சென்று தாக்குதல் நடத்தும் திறன் கொண்ட ஐசிபிஎம் ரக ஏவுகணைகளை மிகவும் பக்கத்தில் இருக்கும் உக்ரைன் நகர் மீது வியாழக்கிழமை ரஷியா தாக்குதல் நடத்தியுள்ளது.

இதனைத் தொடர்ந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றிய புதின் பேசியதாவது: "ரஷியாவின் புதிய ஏவுகணையை நிறுத்துவதற்கு அமெரிக்க வான் பாதுகாப்பு அமைப்புகளால் முடியாது. இது ஒலியின் வேகத்தைவிட பத்து மடக்கு அதிவேகத்தில் செல்லும். ரஷியாவை தாக்க ஏவுகணைகள் வழங்கும் உக்ரைனின் நட்பு நாடுகளுக்கு எதிராகவும் இது பயன்படுத்தப்படும்.

எங்கள் நாட்டுக்கு எதிராக ஆயுதங்களைப் பயன்படுத்த அனுமதிக்கும் நாடுகளின் ராணுவத்துக்கு எதிராக எங்கள் ஆயுதங்களைப் பயன்படுத்த எங்களுக்கு உரிமை உண்டு என்று நாங்கள் நம்புகிறோம். உக்ரைனின் ஆக்கிரமிப்பு தொடர்ந்தால், நாங்கள் தக்க பதிலடி கொடுப்போம். இதுகுறித்து மேற்கத்திய நாடுகள் தீவிரமாக சிந்திக்க வேண்டும்.” எனத் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory