» செய்திகள் - விளையாட்டு » உலகம்
குற்றச்செயலில் பிரதமர் மோடி, ஜெய்சங்கருக்கு தொடர்பு இல்லை : பணிந்தது கனடா அரசு !
வெள்ளி 22, நவம்பர் 2024 12:42:08 PM (IST)
இந்தியாவின் கடும் எதிர்ப்பை தொடர்ந்து, கனடாவில் நடந்த குற்றச் செயல்கள் எதிலும், பிரதமர் மோடி, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தோவல் ஆகியோரை தொடர்புபடுத்தவில்லை' என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
ஹர்தீப் சிங் நிஜ்ஜாரைக் கொல்வதற்கான சதித்திட்டம், இந்திய அரசின் உயர் பதவிகளில் இருப்பவர்களுக்கு தெரியும் என கனடா ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. கனடாவில் நடந்த குற்றச் செயல்களில் பிரதமர் மோடி, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தோவல் ஆகியோருக்கு தொடர்பு இருப்பதாக கூறும் பொய்யான தகவல்களை, கனடா அரசு அதிகாரிகளே பரப்பி விடுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.இதற்கு இந்திய அரசு சார்பில் கடுமையான கண்டனம் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கனடா பிரதமரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நதாலி ஜி ட்ரூயின் வெளியிட்ட அறிக்கை: பிரதமர் மோடி, அமைச்சர் ஜெய்சங்கர் அல்லது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோரை கடுமையான குற்றச் செயல்களுடன் தொடர்புபடுத்துவது குறித்து கனடா அரசு கூறவில்லை. இதற்கு எந்த ஆதாரமும் இல்லை. மாறாக, இது ஊகமானது மற்றும் தவறானது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
'இது போன்ற அவதூறு பிரசாரங்கள் ஏற்கனவே சிதைந்திருக்கும் இரு நாட்டு உறவுகளை மேலும் சேதப்படுத்தும்' என மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

துபாய் இந்தியத் துணைத் தூதரகம் தற்காலிகமாக மூடல்: பாஸ்போர்ட், விசா சேவைகள் நிறுத்தம்!
வெள்ளி 17, ஜூலை 2026 12:53:31 PM (IST)

ஈரான் தாக்குதலில் இந்தியர் மரணம் : கப்பல் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு!
வியாழன் 16, ஜூலை 2026 12:37:58 PM (IST)

ஹோர்முஸ் தாக்குதலில் இந்திய மாலுமி பலி: ஈரானுக்கு மத்திய அரசு கண்டனம்!
செவ்வாய் 14, ஜூலை 2026 4:20:43 PM (IST)

ஈரானைக் கற்காலத்திற்குக் கொண்டு வந்துவிட்டோம்: அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடி அறிக்கை!
செவ்வாய் 14, ஜூலை 2026 12:11:48 PM (IST)

ஈரானுக்கு ஆதரவாக களம் இறங்கிய ரஷியா: அதிநவீன உளவு விமானத்தை அனுப்பினார் புதின்!
செவ்வாய் 14, ஜூலை 2026 8:33:19 AM (IST)

வங்கதேசத்தில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவு : 51 பேர் உயிரிழப்பு; 10 லட்சம் மக்கள் பாதிப்பு!
திங்கள் 13, ஜூலை 2026 5:04:09 PM (IST)


