» செய்திகள் - விளையாட்டு » உலகம்
லெபனான் மீது இஸ்ரேல் சரமாரி ஏவுகணை தாக்குதல் : 20 பேர் பலி; 66 பேர் படுகாயம்!
திங்கள் 25, நவம்பர் 2024 8:49:13 AM (IST)

லெபனான் மீது இஸ்ரேல் சரமாரி ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் 20 பேர் பலியாகினர். மேலும் 66 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது.
காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலுக்குள் நுழைந்து கடந்த ஆண்டு தாக்குதல் நடத்தினர். இதில் 1,200 பேர் பலியாகினர். இதனையடுத்து காசா மீது இஸ்ரேல் போர் தொடுத்தது. கடந்த ஓராண்டுக்கும் மேலாக இந்த போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதில் ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவாக லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா மற்றும் ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் செயல்படுகின்றனர். இவர்கள் இஸ்ரேல் மீது அடிக்கடி தாக்குதல் நடத்துகின்றனர். இதனால் ஆத்திரம் அடைந்த இஸ்ரேல் அவர்களது முகாமை குறிவைத்தும் தாக்குதல் நடத்துகிறது. அந்தவகையில் லெபனான் தலைநகர் பெய்ரூட் மீது இஸ்ரேல் சரமாரி ஏவுகைண தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதலில் அங்குள்ள பல அடுக்குமாடி குடியிருப்புகள் தரைமட்டமாகின. மீட்பு படையினர் அங்கு விரைந்து கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் இறங்கினர். அப்போது 20 பேர் பிணமாக கண்டெடுக்கப்பட்டனர். படுகாயம் அடைந்த 66 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மத்திய கிழக்கில் அமைதி முயற்சிகளுக்கு முழு ஆதரவு : ஐ.நா. கூட்டத்தில் இந்தியா உறுதி
சனி 25, அக்டோபர் 2025 5:46:24 PM (IST)

ரஷியாவிடம் கச்சா எண்ணெய் கொள்முதலை இந்தியா குறைத்துள்ளது: அமெரிக்கா
வெள்ளி 24, அக்டோபர் 2025 12:47:53 PM (IST)

ரஷ்ய எண்ணெய் நிறுவனங்கள் மீது பொருளாதார தடை விதித்தது அமெரிக்கா
வியாழன் 23, அக்டோபர் 2025 4:21:51 PM (IST)

பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் மோதலுக்கு இந்தியா காரணமா? ஆப்கானிஸ்தான் பதிலடி
புதன் 22, அக்டோபர் 2025 12:24:10 PM (IST)

ஜப்பானின் முதல் பெண் பிரதமராக சனே தகைச்சி தேர்வு!
செவ்வாய் 21, அக்டோபர் 2025 5:20:01 PM (IST)

வர்த்தக ஒப்பந்தம் செய்யாவிட்டால் 155 சதவீதம் வரி: சீனாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை!
செவ்வாய் 21, அக்டோபர் 2025 12:53:30 PM (IST)





இது தான் உலக ஊடகம்Nov 25, 2024 - 01:45:45 PM | Posted IP 162.1*****