» செய்திகள் - விளையாட்டு » உலகம்
வங்கதேசத்தின் தேசிய கொடியை அவமதிப்பு இந்து மத தலைவருக்கு ஜாமீன் மறுப்பு!
செவ்வாய் 26, நவம்பர் 2024 4:01:31 PM (IST)
வங்கதேசத்தின் தேசிய கொடியை அவமதித்ததாக கைது செய்யப்பட்ட இந்து மத தலைவரின் ஜாமீன் மனுவை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
வங்கதேசத்தின் தேசிய கொடியை அவமதித்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், 'சமிலிட்டா சனாதனி ஜோட்' என்ற இந்து மத அமைப்பின் தலைவர் சின்மய் கிருஷ்ண தாஸ் உள்ளிட்ட 19 பேர் மீது கடந்த மாதம் 30-ந்தேதி வங்கதேசத்தில் உள்ள சத்தோகிரம் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அங்கு நடந்த இந்து மத ஊர்வலத்தின்போது வங்கதேச கொடி அவமதிக்கப்பட்டதாக அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது.இதனை தொடர்ந்து டாக்கா சர்வதேச விமான நிலையத்தில் சின்மய் கிருஷ்ண தாஸ் நேற்று கைது செய்யப்பட்டார். இதையடுத்து தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி சத்தோகிரம் கோர்ட்டில் சின்மய் கிருஷ்ண தாஸ் மனு தாக்கல் செய்தார். ஆனால் அவரது ஜாமீன் மனுவை நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை எதிர்த்து இந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் நீதிமன்ற வளாகத்தின் முன்பு திரண்டு கோஷங்களை எழுப்பினர். இந்து மத அமைப்பின் தலைவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் வங்கதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தைவானுக்கு 10 பில்லியன் டாலர் ஆயுதங்கள் விற்பனை: அமெரிக்கா அறிவிப்பு - சீனா கண்டனம்!
வியாழன் 18, டிசம்பர் 2025 5:48:17 PM (IST)

புயல் காற்றில் உடைந்து விழுந்த சுதந்திர தேவி சிலை: பிரேசிலில் பரபரப்பு!
புதன் 17, டிசம்பர் 2025 11:58:56 AM (IST)

பிரதமர் மோடிக்கு கார் ஓட்டிய ஜோர்டான் இளவரசர்!
செவ்வாய் 16, டிசம்பர் 2025 4:03:51 PM (IST)

இந்தியாவுடனான ராணுவ ஒப்பந்த சட்டத்தில் ரஷ்யா அதிபர் புதின் கையெழுத்து!
செவ்வாய் 16, டிசம்பர் 2025 11:21:23 AM (IST)

சிட்னியில் மக்களை சுட்டுக்கொன்ற கொடூரன்: துப்பாகியை பறித்த நபருக்கு குவியும் பாராட்டு!
திங்கள் 15, டிசம்பர் 2025 11:55:17 AM (IST)

ஆஸ்திரேலியாவின் சிட்னி கடற்கரையில் துப்பாக்கிச்சூடு: 10 பேர் உயிரிழப்பு
ஞாயிறு 14, டிசம்பர் 2025 7:08:36 PM (IST)


