» செய்திகள் - விளையாட்டு » உலகம்
ஹமாஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு: இந்திய வம்சாவளி நபர் கைது!
வியாழன் 20, மார்ச் 2025 4:17:52 PM (IST)
அமெரிக்காவில் ஹமாஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக இந்திய வம்சாவளி நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
அமெரிக்காவில் வாஷிங்டனில் உள்ள ஜார்ஜ்டவுன் பல்கலையில் ஆராய்ச்சியாளராக இருப்பவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பதர் கான் சூரி. இவர் அமெரிக்க அமெரிக்க குடியுரிமைப் பெற்ற பெண்ணை திருமணம் செய்து, அங்கு வசித்து வருகிறார். விர்ஜினியாவில் வசிக்கும் இவருக்கு பாலஸ்தீனத்தைச் சேர்ந்த ஹமாஸ் அமைப்புடன் தொடர்பிருப்பதாக அமெரிக்க போலீசாரால் கைது செய்யப்பட்டார். மேலும், யூதர்களுக்கு எதிரான கருத்துக்களை பரப்பி வருவதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த கைது நடவடிக்கை தொடர்ந்து, சூரியின் விசாவை அமெரிக்கா ரத்து செய்தது. மேலும், அவரை நாடு கடத்துவதற்கான பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அமெரிக்கர் இல்லாதவர் மீது குடியேறுதல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பது மிகவும் அரிதானது என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செயலகம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, சூரியின் மனைவி பாலஸ்தீனத்தை சேர்ந்தவர் என்பதால், அவர் மீது வேண்டுமென்றே இந்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாக கைது செய்யப்பட்டவரின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு அமெரிக்க குடியுரிமை பெற்ற கொலம்பியா பல்கலை மாணவன் மஹ்முத் கலில் மீதும் இதே குற்றச்சாட்டில் நடவடிக்கை எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அமீரக லாட்டரியில் இந்தியருக்கு ரூ.250 கோடி பரிசு
புதன் 29, அக்டோபர் 2025 4:46:14 PM (IST)

உக்ரைனில் அணுமின் நிலையம் அருகே நீல நிற நாய்கள்: சமூக ஊடகங்களில் வைரல்!
புதன் 29, அக்டோபர் 2025 12:35:18 PM (IST)

வெளிநாட்டினர், கிரீன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு புதிய நடைமுறை : அமெரிக்கா அறிவிப்பு
செவ்வாய் 28, அக்டோபர் 2025 5:00:36 PM (IST)

பிரான்ஸ் அருங்காட்சியகத்தில் ரூ.898 கோடி பொருட்களை கொள்ளையடித்த 2 பேர் கைது
திங்கள் 27, அக்டோபர் 2025 8:58:03 AM (IST)

மத்திய கிழக்கில் அமைதி முயற்சிகளுக்கு முழு ஆதரவு : ஐ.நா. கூட்டத்தில் இந்தியா உறுதி
சனி 25, அக்டோபர் 2025 5:46:24 PM (IST)

ரஷியாவிடம் கச்சா எண்ணெய் கொள்முதலை இந்தியா குறைத்துள்ளது: அமெரிக்கா
வெள்ளி 24, அக்டோபர் 2025 12:47:53 PM (IST)





தேச பக்தன்Mar 22, 2025 - 02:10:25 PM | Posted IP 172.7*****