» செய்திகள் - விளையாட்டு » உலகம்

நாடு கடத்தும் உத்தரவை ஒத்திவைக்க கோரிக்கை: அமெரிக்க நீதிமன்றத்தில் ராணா மேல்முறையீடு!

சனி 22, மார்ச் 2025 5:38:27 PM (IST)

தன்னை நாடு கடத்தும் உத்தரவை ஒத்திவைக்க கோரி அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் பயங்கரவாதி  தஹாவூர் ராணா தாக்கல் மேல்முறையீடு செய்துள்ளார். 

மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட தஹாவூர் ராணாவை கடந்த 2009-ம் ஆண்டு எப்.பி.ஐ. அதிகாரிகள் சிகாகோவில் கைது செய்தனர். தற்போது லாஸ் ஏஞ்சல்ஸ் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தஹாவூர் ராணாவை நாடு கடத்தும்படி அமெரிக்காவிடம் இந்திய அரசு கோரிக்கை விடுத்தது.

தன்னை இந்தியாவுக்கு நாடு கடத்த தடை விதிக்கக் கோரி, கலிபோர்னியா மற்றும் சான் பிரான்சிஸ்கோ கோர்ட்டுகளில் தஹாவூர் ராணா தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் தஹாவூர் ராணா மேல்முறையீடு செய்தார். இந்த மனு, அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதி எலேனா காகன் முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, தஹாவூர் ராணாவை இந்தியாவுக்கு நாடு கடத்த அனுமதி அளித்து உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து, தன்னை நாடு கடத்தும் உத்தரவை ஒத்திவைக்க கோரி அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் தஹாவூர் ராணா தாக்கல் மேல்முறையீடு செய்துள்ளார். இது தொடர்பாக அவர் தாக்கல் செய்துள்ள புதுப்பிக்கப்பட்ட மனுவில், இந்த வழக்கை நீதிபதி ராபர்ட்ஸ் விசாரிக்க வேண்டும் எனகோரிக்கை விடுத்துள்ளார். இந்த மனு அடுத்த மாதம் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory