» செய்திகள் - விளையாட்டு » உலகம்
கனடாவில் நாடாளுமன்றம் கலைப்பு: முன்கூட்டியே பொதுத் தேர்தலை நடத்த பிரதமர் உத்தரவு!
திங்கள் 24, மார்ச் 2025 10:07:56 AM (IST)
கனடாவின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள மார்க் கார்னி, நடாாளுமன்றத்தை கலைத்து முன்கூட்டியே பொதுத் தேர்தலை நடத்த உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 10 ஆண்டுகளாக பிரதமராக இருந்த ஜஸ்டின் ட்ரூடோ மீது மக்களுக்கும், ஆளும் லிபரல் கட்சியினருக்கும் அதிருப்தி அதிகரித்த நிலையில், தனது பதவியை கடந்த மாதம் ராஜிநாமா செய்தார்.
இதனைத் தொடர்ந்து, புதிய பிரதமராகவும் லிபரல் கட்சித் தலைவராகவும் பொருளாதார நிபுணரான மாா்க் காா்னி தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து, கடந்த 14-ஆம் தேதி பிரதமராக பதவியேற்றுக் கொண்டார். பிரதமராகப் பதவியேற்றுப் பத்து நாள்களே ஆகும் நிலையில், நாடாளுமன்றத்தை கலைத்து முன்கூட்டியே தேர்தலுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக பேசிய அவர், ”டிரம்ப் நம்மை உடைக்க விரும்புகிறார். அது நடக்க நாங்கள் விடமாட்டோம். டிரம்பின் அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்கான தலைவரை மக்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
கனடாவில் உள்ள 343 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் வருகின்ற ஏப்ரல் 28 ஆம் தேதி நடைபெறவுள்ளது. 172 தொகுதிகளில் வெற்றி பெற்று பெரும்பான்மை பெறும் கட்சி ஆட்சி அமைக்கும். தற்போது லிபரல் கட்சி மற்றும் கன்சர்வேடிவ் கனடா கட்சிகளிடையே இருமுனைப் போட்டி நிலவுகிறது. ஜஸ்டின் ட்ரூடோவுக்கான எதிர்ப்பு காரணமாக கன்சர்வேடிவ் கட்சிக்கு ஆதரவு அதிகரித்திருந்தது.
ஆனால், அவர் பதவி விலகி மார்க் கார்னி பொறுப்பேற்ற பிறகு மீண்டும் ஆளும் லிபரல் கட்சிக்கான ஆதரவு அதிகரித்துள்ளது. டிரம்பின் வரி விதிப்பு, அச்சுறுத்தல் உள்ளிட்டவை பிரசாரத்தில் முன்னிலைப்படுத்த இரு கட்சிகளும் திட்டமிட்டுள்ளன.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அணு ஆயுதம் தயாரிப்பதைத் தவிர வேறு வழியில்லை : அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை
புதன் 2, ஏப்ரல் 2025 12:18:53 PM (IST)

மலேசியாவில் எரிவாயு குழாய் வெடித்து சிதறி தீ விபத்து : 100-க்கும் மேற்பட்டோர் படுகாயம்!
புதன் 2, ஏப்ரல் 2025 8:30:26 AM (IST)

துபாயில் யூத மத குரு படுகொலை வழக்கு: 3 பேருக்கு மரண தண்டனை!
செவ்வாய் 1, ஏப்ரல் 2025 11:53:15 AM (IST)

அமெரிக்காவில் பல மாகாணங்களை பந்தாடிய பனிப்புயல்: இயல்புவாழ்க்கை பாதிப்பு
செவ்வாய் 1, ஏப்ரல் 2025 8:11:12 AM (IST)

மியான்மர் நிலநடுக்கத்தில் உயிரிழப்பு 2ஆயிரத்தை கடந்தது : மீட்பு பணிகள் தீவிரம்
செவ்வாய் 1, ஏப்ரல் 2025 8:05:38 AM (IST)

ரஷ்ய அதிபர் புதினின் பாதுகாப்பு அணிவகுப்பில் கார் வெடித்து சிதறியது: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்!
திங்கள் 31, மார்ச் 2025 8:26:34 AM (IST)
