» செய்திகள் - விளையாட்டு » உலகம்

புதின் காலத்துக்கு பின்னர்தான் ரஷிய-உக்ரைன் போர் முடிவுக்கு வரும்: ஜெலன்ஸ்கி சர்ச்சை கருத்து

வெள்ளி 28, மார்ச் 2025 12:00:47 PM (IST)

புதினுக்கு எது வேண்டுமானாலும் நடக்கலாம். அவரது காலத்துக்கு பின்னர்தான் ரஷிய-உக்ரைன் போர் முடிவுக்கு வரும் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

ரஷிய அதிபர் புதின் இந்தியா வருவதாக அந்த நாட்டு வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்துள்ள நிலையில், புதினின் உடல் நிலை குறித்து உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பிரான்சில் நடந்த நிருபர்கள் சந்திப்பு ஒன்றில், ஜெலன்ஸ்கி கூறுகையில், 'ரஷிய அதிபரின் உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளது. எது வேண்டுமானாலும் நடக்கலாம். அவரது காலத்துக்கு பின்னர்தான் ரஷிய-உக்ரைன் போர் முடிவுக்கு வரும்' என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory