» செய்திகள் - விளையாட்டு » உலகம்
புதிய வரி விதிப்பு 90 நாட்களுக்கு நிறுத்தம்: அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு
வியாழன் 10, ஏப்ரல் 2025 11:03:53 AM (IST)
சீனாவை தவிர்த்து, 75க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு உயர்த்தப்பட்ட வரி விதிப்பை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார்.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சமீபத்தில் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளுக்கு வரியை உயர்த்தினார். இதில், அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் நம் நாட்டு தயாரிப்புகளுக்கான வரி 27 சதவீதமாக உயர்த்தப்பட்டது. சீனா இந்த வரி விதிப்புக்கு பதிலடியாக, அமெரிக்க தயாரிப்புகளுக்கான வரியை உயர்த்தியது. இதனால், சீனாவுக்கான வரியை, நேற்று முன்தினம் 104 சதவீதமாக உயர்த்தினார். சீனா விடாப்பிடியாக அமெரிக்காவுக்கான வரியை, 84 சதவீதமாக உயர்த்தியது.இந்நிலையில், சீனாவை தவிர இந்தியா உட்பட 75க்கும் மேற்பட்ட நாடுகளுக்கான வரி விதிப்பை, 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அதிபர் டிரம்ப் அறிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிவிப்பு : சீனா உலக சந்தைகளுக்கு காட்டிய மரியாதையின்மையின் காரணமாக, அந்நாட்டுக்கு அமெரிக்கா விதிக்கும் வரியை, 125 சதவீதமாக உயர்த்தியுள்ளேன். இது உடனடியாக அமலுக்கு வரும். மறுபுறம், 75க்கும் மேற்பட்ட நாடுகள் அமெரிக்காவை அணுகி, பேச்சு நடத்த விரும்புவதாக தெரிவித்துள்ளன.
இந்த நாடுகள் அமெரிக்காவுக்கு எதிராக எந்த விதத்திலும் பதிலடி கொடுக்கவில்லை. எனவே அவர்களுக்கான வரி விதிப்பை 90 நாட்கள் நிறுத்தி வைக்கிறேன். இந்த காலக்கட்டத்தில் 10 சதவீதம் என்ற குறைக்கப்பட்ட பரஸ்பர வரி அமலில் இருக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

புயல் காற்றில் உடைந்து விழுந்த சுதந்திர தேவி சிலை: பிரேசிலில் பரபரப்பு!
புதன் 17, டிசம்பர் 2025 11:58:56 AM (IST)

பிரதமர் மோடிக்கு கார் ஓட்டிய ஜோர்டான் இளவரசர்!
செவ்வாய் 16, டிசம்பர் 2025 4:03:51 PM (IST)

இந்தியாவுடனான ராணுவ ஒப்பந்த சட்டத்தில் ரஷ்யா அதிபர் புதின் கையெழுத்து!
செவ்வாய் 16, டிசம்பர் 2025 11:21:23 AM (IST)

சிட்னியில் மக்களை சுட்டுக்கொன்ற கொடூரன்: துப்பாகியை பறித்த நபருக்கு குவியும் பாராட்டு!
திங்கள் 15, டிசம்பர் 2025 11:55:17 AM (IST)

ஆஸ்திரேலியாவின் சிட்னி கடற்கரையில் துப்பாக்கிச்சூடு: 10 பேர் உயிரிழப்பு
ஞாயிறு 14, டிசம்பர் 2025 7:08:36 PM (IST)

டிரம்ப்பின் கோல்டு கார்டு விசா திட்டத்துக்கு தடை கோரி அமெரிக்காவின் 20 மாகாணங்கள் வழக்கு!
சனி 13, டிசம்பர் 2025 12:46:26 PM (IST)


