» செய்திகள் - விளையாட்டு » உலகம்
உக்ரைன் தலைநகர் மீது ரஷ்யா நள்ளிரவில் ஏவுகணைத் தாக்குதல்: ஒருவர் பலி; 16 பேர் காயம்!
திங்கள் 20, ஜூலை 2026 5:01:30 PM (IST)

உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்யா நள்ளிரவில் நடத்திய பாலிஸ்டிக் ரக ஏவுகணைத் தாக்குதல்களில் ஒருவர் பலியானார். 16 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்நாட்டின் மீது ரஷ்யா கடந்த 2022-ஆம் ஆண்டு போரைத் தொடங்கியது. உக்ரைன் ராணுவமும் இதற்குத் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது. இரு நாடுகளுக்கும் இடையேயான இந்த ராணுவ மோதல் தற்போது 5-ஆவது ஆண்டாகத் நீடித்து வருகிறது.
இதன் தொடர்ச்சியாக, ரஷ்யா மீது உக்ரைன் நேற்று முன்தினம் நள்ளிரவில் நடத்திய நீண்டதூர இலக்குகளைத் தாக்கும் ட்ரோன் தாக்குதல்களில் 7 பேர் பலியாகினர். 50 பேர் காயமடைந்தனர். ரஷ்யாவின் முக்கிய ஆயுத உள்கட்டமைப்புகள், எண்ணெய் நிறுவனம் ஆகியவற்றைக் குறிவைத்து உக்ரைன் இந்தத் தாக்குதலை நடத்தியிருந்தது.
ரஷ்யாவின் ஏவுகணைப் பதிலடி:
உக்ரைனின் இந்தத் தாக்குதலுக்குப் பதிலடியாக, உக்ரைன் தலைநகர் கீவ் நகர் மீது நேற்று நள்ளிரவு பாலிஸ்டிக் ரக ஏவுகணைகளை வீசி ரஷ்யா கொடூரத் தாக்குதலை நடத்தியுள்ளது. நள்ளிரவு 1.30 மணிக்குத் தொடங்கி இன்று அதிகாலை வரை பல மணி நேரம் நீடித்த இந்தத் தாக்குதலின் வெடிச்சத்தம் தலைநகரம் முழுவதும் பயங்கரமாக எதிரொலித்தது. இக்கோரச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 16 பேர் காயமடைந்துள்ளனர்.
இத்தாக்குதல் குறித்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளதாவது: உக்ரைனை இலக்காகக் கொண்டு நள்ளிரவில் 41 ஏவுகணைகள், 125 ட்ரோன்களை ரஷ்யா ஏவியுள்ளது. தலைநகர் கீவ் நகரின் 5 மாவட்டங்களில் இதன் தாக்கம் பெருமளவில் உணரப்பட்டுள்ளது. இத்தாக்குதலால் குடியிருப்பு கட்டிடங்கள், அலுவலகங்கள், தொழிற்சாலைகள், வாகனங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக உக்ரைன் அவசரகால சேவை அமைப்பு அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

துபாய் இந்தியத் துணைத் தூதரகம் தற்காலிகமாக மூடல்: பாஸ்போர்ட், விசா சேவைகள் நிறுத்தம்!
வெள்ளி 17, ஜூலை 2026 12:53:31 PM (IST)

ஈரான் தாக்குதலில் இந்தியர் மரணம் : கப்பல் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு!
வியாழன் 16, ஜூலை 2026 12:37:58 PM (IST)

ஹோர்முஸ் தாக்குதலில் இந்திய மாலுமி பலி: ஈரானுக்கு மத்திய அரசு கண்டனம்!
செவ்வாய் 14, ஜூலை 2026 4:20:43 PM (IST)

ஈரானைக் கற்காலத்திற்குக் கொண்டு வந்துவிட்டோம்: அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடி அறிக்கை!
செவ்வாய் 14, ஜூலை 2026 12:11:48 PM (IST)

ஈரானுக்கு ஆதரவாக களம் இறங்கிய ரஷியா: அதிநவீன உளவு விமானத்தை அனுப்பினார் புதின்!
செவ்வாய் 14, ஜூலை 2026 8:33:19 AM (IST)

வங்கதேசத்தில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவு : 51 பேர் உயிரிழப்பு; 10 லட்சம் மக்கள் பாதிப்பு!
திங்கள் 13, ஜூலை 2026 5:04:09 PM (IST)


