» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

ரூ.50 கோடி மோசடி வழக்கில் அதிரடி திருப்பம்: டிரைவர் அடித்துக் கொலை - பெண் கைது!

திங்கள் 6, நவம்பர் 2023 8:25:04 AM (IST)

ரூ.50 கோடி மோசடி வழக்கை சி.பி.ஐ. விசாரித்தபோது நெல்லை கார் டிரைவர் அடித்துக் கொலை செய்யப்பட்டது தெரியவந்து உள்ளது. இதுதொடர்பாக பெண் கைது செய்யப்பட்டார்.

நெல்லை பாளையங்கோட்டை அருகே கீழநத்தம் தெற்கூரைச் சேர்ந்தவர் ராமன் (45). வாடகை கார் டிரைவரான இவர் கடந்த 2020-ம் ஆண்டு உடலில் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் சில நாட்களில் சிகிச்சை பலனின்றி கடந்த 12-8-2020 அன்று இறந்தார். இதுதொடர்பாக போலீசாரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, பின்னர் முடிக்கப்பட்டு விட்டது.

இந்த நிலையில் வங்கியில் கடன் பெற்று மோசடி செய்யப்பட்டது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தி வந்தது. இதில் நெல்லையை சேர்ந்த வாடகை கார் நிறுவன உரிமையாளர் உள்பட 6 பேர் சேர்ந்து சென்னையில் உள்ள ஒரு வங்கியில் ரூ.50 கோடி கடன் வாங்கி உள்ளனர். அதனை தங்களுக்கு தெரிந்தவர்கள் வங்கி கணக்கில் ரூ.50 லட்சமாக பிரித்து அனுப்பி உள்ளனர். அதில் ரூ.3 லட்சம் மட்டும் செலவுக்கு எடுத்துக்கொண்டு மீதி தொகையை சம்பந்தப்பட்டவர்களிடம் திருப்பி கொடுத்து விடவேண்டுமாம்.

அதன்படி ராமனுக்கு பணம் அனுப்பியபோது, சொன்னபடி தொகையை அவர் திருப்பி கொடுக்கவில்லை என்று பிரச்சினை ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து 6 பேர் சேர்ந்து ராமனை அடித்துக் கொலை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து சி.பி.ஐ. அதிகாரிகள், சம்பவம் நிகழ்ந்த போலீஸ் எல்லையான பாளையங்கோட்டை தாலுகா போலீஸ் நிலையத்துக்கு தகவல் அளித்து உள்ளனர். அதன்படி ராமன் இறந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி பதிவு செய்த போலீசார், இதுதொடர்பாக ராணி (56) என்ற பெண்ணை கைது செய்தனர். மேலும் தலைமறைவான 5 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory