» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

பிறந்தநாளுக்கு செல்போன் வாங்கி கொடுக்காததால் பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை!

திங்கள் 6, நவம்பர் 2023 8:29:54 AM (IST)

திசையன்விளையில் பிறந்த நாளுக்கு பெற்றோர் செல்போன் வாங்கி ெகாடுக்காததால், பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே மகாதேவன்குளம் நடுத்தெருவைச் சேர்ந்தவர் சீனிவாசன். வாழை இலை வியாபாரி. இவருடைய மனைவி தங்கம். இவர்களுக்கு 2 மகன்களும், முத்து அரி (வயது 16) என்ற மகளும் உண்டு. அப்பகுதியில் உள்ள பள்ளிக்கூடத்தில் முத்து அரி பிளஸ்-1 படித்து வந்தார். அவருக்கு நேற்று முன்தினம் பிறந்த நாள் ஆகும். எனவே முத்து அரி தனக்கு பிறந்த நாள் பரிசாக செல்போன் வாங்கி தருமாறு பெற்றோரிடம் கேட்டார்.

அதற்கு பெற்றோர் தற்போது புதிதாக வீடு கட்டி வருவதால், பிறகு செல்போன் வாங்கி தருவதாக கூறினர். இதனால் மனமுடைந்த முத்து அரி நேற்று காலையில் வீட்டில் திடீரென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் கதறி அழுதனர். இதுகுறித்து திசையன்விளை போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். இறந்த முத்து அரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.பிறந்த நாளுக்கு பெற்றோர் செல்போன் வாங்கி கொடுக்காததால், பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory