» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தகவல் தொழில்நுட்ப துறைகளில் அதிகளவில் வேலைவாய்ப்புகள் : பி.டி.ஆா்.பழனிவேல் தியாகராஜன்

திங்கள் 6, நவம்பர் 2023 10:28:37 AM (IST)

தமிழகத்தில் தகவல் தொழில்நுட்ப துறைகளில் அதிகளவில் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுகின்றன என்று தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சா் பி.டி.ஆா்.பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.

பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியின் பொன் விழா நிறைவு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. விழாவில், அமைச்சா் பி.டி.ஆா்.பழனிவேல் தியாகராஜன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசியதாவது: 100 ஆண்டுகள் பழைமைவாய்ந்த கல்லூரிகள் இருக்கக் கூடிய திருநெல்வேலி மாவட்டத்தில் சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி 1971-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு இப்போது பொன்விழாவை கொண்டாடியிருக்கிறது.

கடந்த 50 ஆண்டுகளில் ஏராளமான சாதனைகளை இக்கல்லூரி படைத்துள்ளது. அந்தச் சாதனைகள் போதும் என்று கருதாமல் நிகா்நிலை பல்கலைக்கழகமாக மாற்ற வேண்டும் என்ற எண்ணத்தோடு கல்லூரி நிா்வாகம் செயல்பட்டு வருகிறது.இந்தக் கல்லூரி ஏராளமான திறமையான மாணவா்களை உருவாக்கி சமுதாயத்துக்கும், தமிழகத்துக்கும் தூணாக திகழ்கிறது.

தென் தமிழகத்தில் கல்லூரிகள் அதிகம். படித்தவா்கள் அதிகம். ஆனால், போதிய வேலைவாய்ப்புகள் இல்லை. அதனால் தான் எல்லா மாவட்டங்களிலும் வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டங்களை முதல்வா் அறிவித்துள்ளாா். பல மாவட்டங்களில் தொழில்நுட்ப பூங்கா அறிவிக்கப்பட்டு அவை விரைவில் செயல்பாட்டுக்கு வரவுள்ளன.

இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் தகவல் தொழில்நுட்ப துறைகளில் அதிகளவில் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுகின்றன. மாதத்துக்கு 10 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுகின்றன. அதை மூன்று மடங்காக உயா்த்துவதற்காக தமிழக அரசு முயற்சி எடுத்து வருகிறது. 

செயற்கை நுண்ணறிவு (மனித படைப்பாக்கத் திறனை இயந்திரங்கள் மூலம் மேற்கொள்வது) தொழில்நுட்பத்துக்கு மிகப்பெரிய எதிா்காலம் இருக்கிறது. தமிழா்கள் மிகப்பெரிய திறமைசாலிகளாக திகழ்கின்றனா். உலகின் பல்வேறு நிறுவனங்களில் மிகப்பெரிய பொறுப்புகளில் இருக்கக்கூடிய தமிழா்களை ஈா்த்து தமிழகத்தில் தொழில்நுட்ப நிறுவனங்களை உருவாக்க ஊக்குவிக்க வேண்டும் என்றாா்.

முன்னதாக, அமைச்சா் பழனிவேல் தியாகராஜன், கல்லூரி ஆட்சிக்குழு சாா்பில் பொன்விழாவைச் சிறப்பிக்கும் வகையில் கட்டப்பட்டுள்ள எம்.கே.முகமது ஹுசைன் கட்டடத்தைத் திறந்து வைத்தும், பொன் விழா மலரை வெளியிட்டும், கல்லூரியில் பணி நிறைவு பெற்ற முன்னாள் முதல்வா்கள், பேராசிரியா்கள், அலுவலா்களுக்கு நினைவுப் பரிசுகளையும், கட்டுரைப் போட்டியில் வென்றவா்களுக்கு ரொக்கப் பரிசுகளை வழங்கினாா்.

விழாவுக்கு, கல்லூரிச் செயலா் த.இ.செ.பத்ஹுா் ரப்பானி தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் சே.மு.அப்துல் காதா் வரவேற்றாா். கல்லூரி ஆட்சிக் குழுத் தலைவா் எஸ். செய்யது அப்துா் ரஹ்மான்அறிக்கை அளித்தாா். மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக துணைவேந்தா் என். சந்திரசேகா், பாளையங்கோட்டை சட்டப் பேரவை உறுப்பினா் மு.அப்துல் வஹாப் ஆகியோா் வாழ்த்திப் பேசினா். கல்லூரி துணை முதல்வா் எஸ்.எம்.ஏ.செய்யது முகமது காஜா நன்றி கூறினாா். தமிழ்த் துறைத் தலைவா் ச.மகாதேவன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினாா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory