» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நலதிட்ட உதவிகள் : ஆட்சியர் வழங்கினார்!
திங்கள் 6, நவம்பர் 2023 4:34:45 PM (IST)

திருநெல்வேலி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நலதிட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் வழங்கினார்.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்டரங்கில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் கார்த்திகேயன், தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், பொதுமக்களிடம் இருந்து மாற்றுத்திறனாளிகள் உதவித்தெகை, முதிர்கன்னி உதவித்தொகை, விபத்து மரண உதவித்தொகை, இலவச வீட்டுமனை பட்டா, பட்டா மற்றும் பட்டா மாறுதல் வேலைவாய்ப்பு, மற்றும் குடிநீர், சாலை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான 300 க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டது.
இம்மனுக்களை சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து மனுக்களை பரிசீலனை செய்ய உரிய நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவிட்டார்கள். மேலும் முதலமைச்சரின் தனிப்பிரிவுகள் மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்குமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் இயற்கை மரணம்/ஈமச் சடங்கு நிவாரணத் தொகை தலா ரூ 17 ஆயிரம் வீதம் 12 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ. 2,04,000 க்கான காசோலைகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்ள்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் மா.சுகன்யா, தனித்துணை ஆட்சியர் ஜெயா, உதவி ஆணையர் கலால் ராமநாதன் மற்றும் அனைத்து துறை சார்ந்த அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கல்லிடைக்குறிச்சி ரயில் பயணிகள் நலச் சங்கத்தின் நிர்வாகிகள் கூட்டம்
ஞாயிறு 11, மே 2025 9:33:44 AM (IST)

நெல்லை, பாளை தொகுதிகள் அ.தி.மு.க.வுக்கு வேண்டும்: இபிஎஸ்க்கு தொண்டர்கள் கடிதம்!
சனி 10, மே 2025 12:51:20 PM (IST)

மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்து 2 பவுன் தங்க சங்கிலி பறிப்பு: வாலிபர் கைது!
சனி 10, மே 2025 12:44:11 PM (IST)

கூடன்குளம் அணுமின்நிலையத்தில் போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை!
சனி 10, மே 2025 11:38:51 AM (IST)

பெட்ரோல் பங்க் ஊழியரிடம் ரூ.36 லட்சம் கொள்ளை: பெண் உள்பட 10 பேர் கும்பல் கைது!
சனி 10, மே 2025 9:04:41 AM (IST)

நெல்லையப்பர் கோயிலில் வருஷாபிஷேக விழா: திரளான பக்தர்கள் தரிசனம்!
வியாழன் 8, மே 2025 3:56:15 PM (IST)
