» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

இலஞ்சியில் மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம்: ஆட்சியர் துவக்கி வைத்தார்

செவ்வாய் 7, நவம்பர் 2023 10:04:47 AM (IST)



இலஞ்சியில் மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாமை தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் துரை.இரவிச்சந்திரன் துவக்கி வைத்தார்.

தென்காசி மாவட்டம் இலஞ்சி முதலாளி குடியிருப்பில் நடைபெற்ற தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாமை மாவட்ட ஆட்சியர் துரை.இரவிச்சந்திரன் தொடங்கி வைத்து கோமாரி பற்றிய விழிப்புணர்வு துண்டு பிரதிகளை வெளியிட்டார். கால்நடை நல அட்டைகளை கால்நடை வளர்ப்போருக்கு வழங்கினார்.

தென்காசி மாவட்டம் முழுவதும் சுமார் 1.35 இலட்சம் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு 46 குழுக்கள் கால்நடை பராமரிப்புத்துறை மூலம் ஏற்படுத்தப்பட்டு உள்ளாட்சித்துறை, பால்வளம் மற்றும் ஆவின் உடன் இணைந்து செயலாற்ற உள்ளது.
எனவே பொதுமக்கள் தங்கள் ஊரில் தடுப்பூசி போட குழுவினர் வரும்போது அனைத்து மாடுகளுக்கும் தடுப்பூசி போட்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் துரை.இரவிச்சந்திரன் தெரிவித்தார்.

இம்முகாமில் தென்காசி கோட்ட உதவி இயக்குநர் மு.மகேஷ்வரி, கால்நடை உதவி மருத்துவர்கள் வெள்ளைப் பாண்டி, .செல்வ குத்தாலிங்கம், சிவகுமார், புனிதா, அருண்பாண்டியன், கால்நடை ஆய்வாளர்கள். அருண்குமார், பூ மாரிசெல்வம், கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் மாடசாமி, அந்தோணியம்மாள், இலஞ்சி பேரூராட்சி தலைவர் சின்னத்தாய், துணை ஊராட்சி மன்ற தலைவர் முத்தையா, வார்டு உறுப்பினர் இராஜேஸ்வரி, வல்லம் ஊராட்சி மன்றத் தலைவர் ஜமீன் பாத்திமா,  உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி)  ரா. ராமசுப்பிரமணியன் ஆகியோர் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory